Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குறைந்த வரிகள் செலுத்துவதை ஒப்புக் கொண்ட பிபிசி.. வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை..! | Bbc News India Income Tax

Gowthami Subramani Updated:
குறைந்த வரிகள் செலுத்துவதை ஒப்புக் கொண்ட பிபிசி.. வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை..! | Bbc News India Income TaxRepresentative Image.

ஊடக நிறுவனமாக விளங்கும் பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (BBC) இந்தியாவில் குறைந்த வரிகள் செலுத்தியுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் இரண்டு அதிகாரிகள், பிபிசி அதன் உண்மையான வரித்தொகையை விட, குறைந்த அளவிலான வரிகளைச் செலுத்தியதாக கூறுகிறது.

சில மாதங்களுக்கு முன், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களை, அதிகாரிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் சர்வே செய்துள்ளனர். இந்தியா: மோடி கேள்வி என்ற பெயரில் பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்டது. அதன் பின்னரே, இந்த சர்வே வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று, மும்பை மற்றும் புதுதில்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் நடந்த ஆய்வு நடவடிக்கைகளைத் தொகுத்து, வரித்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், நடவடிக்கை மேற்கொள்ளும் போது, குழுவின் வெளிநாட்டு நிறுவனங்களால், இந்தியாவில்  வெளிப்படுத்தப்படாத சில பணப் பரிமாற்றங்களுக்கு வரி செலுத்தப்படவில்லை என்பதற்கான சான்றுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐடி துறை, நிறுவனத்தின் யூனிட்டுகளில் வெளிப்படுத்திய வருமானம் மற்றும் இலாபம், இந்தியாவின் செயல்பாடுகளின் அளவிற்கு ஏற்ப இல்லை என குற்றம் சாட்டியுள்ளது. மேலும், பிபிசி ஆனது, அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாகக் கூறியிருந்தது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்