Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பீர் குடிக்கும் இளம் பெண்கள்.....விற்பனை சதவீதம் அதிகரிப்பு..!

madhankumar June 09, 2022 & 09:11 [IST]
பீர் குடிக்கும் இளம் பெண்கள்.....விற்பனை சதவீதம் அதிகரிப்பு..!Representative Image.

உலக அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றானது பெரும்பாலான மக்களின் வாழ்க்கை முறையையே புரட்டிபோட்டுவிட்டது என்ற கூறலாம், இதில் பல மாற்றங்கள் இருந்தாலும், மது அருந்துபவர்களின் மாற்றத்தையும் கணக்கில் கொள்ளவேண்டியுள்ளது. அதாவது, கொரோனாவுக்கு பிறகு வீடுகளில் இருந்து மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

இந்த கொரோனா பரவல் காரணமாக மது குடிப்போரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு அடுத்தடுத்து முழு முடக்கம் காரணமாக மது குடிப்பவர்களில் பெரும்பாலனவர்கள் அந்த பழக்கத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. முழு முடக்கம் நீங்கிய பிறகும், மது குடிப்பவர்கள் எண்ணிக்கை உயரவில்லை. சுமார் 20 சதவீதம் பேர் மது போதையில் இருந்து விடுபட்டு இருந்தனர்.

இந்த எண்ணிக்கையானது தற்போது படிப்படியாக உயர்ந்துள்ளது. அதே போல் மது பாட்டில்கள் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. விற்பனை அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

அந்த வகையில் நடத்தப்பட்ட ஆய்வில் பீர் மற்றும் மதுபான பாட்டில்களின் விற்பனை 18 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவுக்கு பிறகு வீடுகளில் இருந்து மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வரும் ஆண்டுகளில் மது விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் பீர் குடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசு பேருந்தில் மாணவிகள் ஆளுக்கொரு பீர் பாட்டிலை வைத்துக்கொண்டு குடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, போன்ற மாநிலங்களில் பெண்கள் பீர் குடிப்பது சகஜமாகிவிட்டது. இதில் பள்ளி மாணவர்கள் அதிகம் என்பது வருத்தமளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்