Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்த வேண்டும்...பெல்ஜியம் அரசு அதிரடி..!

madhankumar May 23, 2022 & 11:40 [IST]
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்த வேண்டும்...பெல்ஜியம் அரசு அதிரடி..!Representative Image.

உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கும் நிலையில் தற்போது "மங்கி பாக்ஸ்" என்று பெயரிடப்பட்டுள்ள குரங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் கடந்த மே 21-ந் தேதி நிலவரப்படி மொத்தமாக 12 நாடுகளில் 92 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 28 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு சந்தேகிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. அதிர்ஷ்டவசமாக இதுவரை குரங்கு காய்ச்சலாளால் பாதிப்புக்குள்ளானோர் யாரும் பலியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய தகவலாக குரங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானோருடன் நேரடியாக உடல்ரீதியிலான தொடர்பு கொண்டவர்கள், அறிகுறிகளை கொண்டிருந்தால் அவர்கள் அதிக ஆபத்தில் இருப்பவர்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த நிலையில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்துதலை கட்டாயமாக்கிய முதல் நாடாக பெல்ஜியம் மாறியுள்ளது. கடந்த வாரம் அங்கு நான்கு பேருக்கு குரங்கு காய்ச்சல் பதிவாகியதை அடுத்து, 21 நாள்கள் தனிமைப்படுத்தலைக் பெல்ஜியம் கட்டாயமாக்கியுள்ளது . நாட்டில் குரங்கு காய்ச்சல் தீவிரம் அடையாமல் இருக்க பெல்ஜிய சுகாதார அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்