Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாய்களுக்கு கூலிங் கிளாஸ், ஷூ..! அமெரிக்காவில் அசத்தல்..!

Muthu Kumar July 23, 2022 & 17:45 [IST]
நாய்களுக்கு கூலிங் கிளாஸ், ஷூ..! அமெரிக்காவில் அசத்தல்..!Representative Image.

அமெரிக்காவில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், காவல்துறையில் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றும் நாய்களுக்கு கூலிங் கிளாஸ், ஷூ அணிவித்துள்ளனர். 

அமெரிக்காவில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் வெயில் வாட்டி நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காவல்துறையில் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றும் நாய்களுக்கு கூலிங் கிளாஸ், ஷூ அளித்து அக்கறையுடன் பாதுகாத்துள்ளனர். இது தொடர்பாண வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், “பிரத்யேக காலணிகள், சூடான சாலைகளில் இருந்து பாதுகாப்பதற்காகவும், தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களுக்கு எதிராக நாய்களின் கண்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க சன் கிளாஸ்கள் பயன்படுத்தபட்டது” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், போலீசார் தங்களது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில், “வெப்பநிலை அதிகமாக இருக்கும் காலங்களில் உங்கள் வளர்ப்பு பிராணிகளை வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம் மற்றும் வெளியில் அனுமதிக்கும் முன் தரையின் வெப்பநிலையை உணர மறந்துவிடாதீர்” என பதிவிட்டுள்ளனர். இதற்க்கு பலரும் பாரட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்