Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நிலக்கரி சுரங்க மோசடி.. எட்டு ஐபிஎஸ் அதிகாரிகள்.. கட்டம் கட்டும் அமலாக்கத்துறை!!

Sekar August 11, 2022 & 16:25 [IST]
நிலக்கரி சுரங்க மோசடி.. எட்டு ஐபிஎஸ் அதிகாரிகள்.. கட்டம் கட்டும் அமலாக்கத்துறை!!Representative Image.

சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் தொடர்பான வழக்கில் சுகேஷ் ஜெயின், கியான்வந்த் சிங், ராஜீப் மிஸ்ரா, ஷியாம் சிங், செல்வ முருகன், கோட்டேஷ்வர் ராவ் உள்ளிட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 8 ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்த வாரம் டெல்லியில் உள்ள அமலாக்க இயக்குநரக அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக மேற்கு வங்கத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் மே 27 அன்று தெரிவித்தது.

இந்த வழக்கில் இது மூன்றாவது கைதாகும். இதற்கு முன்னதாக, மேற்கு வங்க காவல் துறையின் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர் மற்றும் 2021 இல் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் ஏற்கனவே மேற்குவங்க அமைச்சர் உட்பட பலரை பல்வேறு வழக்குகளில் தங்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ள நிலையில், தற்போது நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கட்டம் கட்டியுள்ளது மேற்குவங்க அரசியலில் பரபரப்பை அதிகரித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்