Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

களையிழந்து காணப்பட்ட பவானி கூடுதுறை..

Muthu Kumar August 04, 2022 & 09:30 [IST]
களையிழந்து காணப்பட்ட பவானி கூடுதுறை.. Representative Image.

தமிழகத்தில் ஆண்டு தோறும் ஆடி 18-ம் தேதி கோலாகலமாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், விவசாயிகள் காவிரி ஆற்றை வணங்கி ஆடிப்பட்ட விவசாய பணிகளை தொடங்குவது வழக்கம். மேலும், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் முளைப்பாரிகள் விட்டு பூஜை செய்வது வழக்கம்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும், ஆடி மாதத்தில் கூடுதுறையில் செய்யப்படும் பரிகார பூஜைகள், திதி-தர்ப்பணங்கள் செய்வதற்க்காக ஆடிப்பெருக்கு தினத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வழக்கம்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப் பிரவாகம் ஏற்பட்டது. பவானி கூடுதுறையில் படித்துறைகள் அனைத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், பவானி கூடுதுறைக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும், பவானி கூடுதுறைக்கு செல்ல பொதுமக்கள், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், 1008 லிங்கேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் அன்றாட பூஜைகள் மட்டும் செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி, காவிரியில் பொதுமக்கள் நீராட தடை விதிக்கப்பட்டதால் அருகில் உள்ள காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் பக்தர்கள் பூஜைகள் செய்து, புனித நீராடினார்கள். மேலும், வெள்ளநீர் பாய்ந்து செல்லும் காவிரி ஆற்றை குமாரபாளையம் பாலத்தில் நின்று ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்