Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவி ஸ்ரீமதியின் தற்கொலை விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

madhankumar August 04, 2022 & 09:26 [IST]
மாணவி ஸ்ரீமதியின் தற்கொலை விவகாரம்:  புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!Representative Image.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தத மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என தகவல் வெளியானது. இதனையடுத்து தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர். இதனையடுத்து நடந்த கலவரத்தில் பள்ளி சம்மந்தப்பட்ட பள்ளி போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது, மேலும் மாணவியின் உடல் இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் மனைவியின் உடல் பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு முறையாக அடக்கம் செய்யப்பட்டது,. 

இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மாணவி பள்ளி வளாகத்தில் நடமாடும் காட்சியும், மாடிப்படிக்கட்டுகளில் ஏறுவது போல சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இந்நிலையில்  ஸ்ரீமதியின் உடல் தரையில் இருந்த நிலையில் பள்ளியினுடைய செயலாளர் சாந்தி காவலர் மண்ணாங்கட்டி விடுதி காப்பாளர் கிருத்திகா உட்பட 4 பேர் மாணவியின் உடலை மருத்துவமனைக்கு தூக்கி செல்லக்கூடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

தற்போது மாணவி சம்மந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் துண்டு துண்டாக ஏன் வெளியிடப்படுகின்றன? இது சந்தீகத்தையே ஏற்படுத்துகிறது எனவும் முழு வீடியோவையும் போலீசார் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீமதியின் தாயார் செல்வி கூறுகையில் கடைசியாக கடந்த 13 ஆம் தேதி தான் தன்னிடம் சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்பட்டன, அதன் பின்னர் எந்த ஒரு சிசிடிவி காட்சியும் காண்பிக்கப்படவில்லை என கூறியுள்ளார். மேலும் தனது மகள் மாடியில் இருந்துதான் விழுந்து இறந்தார் என்பது உண்மை என்றல் முழு காட்சிகளையும் வெளியிடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்