Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காய்ச்சல் சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம்

Baskarans Updated:
காய்ச்சல் சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம்Representative Image.

கடலூர்: சளி, காய்ச்சல் தொந்தரவு காரணமாக சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் நாய்கடி ஊசி போட்ட செவிலியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் அருகேயுள்ள கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மூத்த மகள் சாதனாவுக்கு சளி, காய்ச்சல் தொந்தரவு இருந்ததால், கடந்த 27ஆம் தேதி சிகிசிக்கைக்கா கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சிறுமிக்கு மருத்து, மாத்திரை, ஊசி போடுவதற்கு சீட்டு  எழுதி கொடுத்துள்ளார். இதையடுத்து கருணாகரன் தனது மகளை ஊசி போடும் இடத்திற்கு அழைத்துச் சென்று செவிலியரிடம் சீட்டை கொடுத்துள்ளார். சீட்டை வாங்கிய செவிலியர் சிறுமிக்கு இரண்டு ஊசி போட்டுள்ளார். இதைப்பார்த்த கருணாகரன் ஏன் இரண்டு ஊசி போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு நாய்கடிக்கு இரண்டு ஊசி தான் போடவேண்டும் எனக் கூறியுள்ளார். இதில் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மீண்டும் கேட்டதற்கு மலுப்பலாக பதிலளித்துள்ளார்.


இந்நிலையில் வீட்டுக்கு சென்ற சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவரை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கருணாகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து செவிலியரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்