Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நூற்றாண்டு காணாத பாதிப்பு 100 நாளில் தீராது.. பிரதமர் மோடி பளீச்!!

Sekar October 22, 2022 & 16:52 [IST]
நூற்றாண்டு காணாத பாதிப்பு 100 நாளில் தீராது.. பிரதமர் மோடி பளீச்!!Representative Image.

கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பொருளாதார பிரச்சினையை எதிர்கொள்ளும் நிலையில், அதை தணிக்கும் நோக்கில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

75,000 நியமனக் கடிதங்களை அரசுப் பணிக்கான விண்ணப்பதாரர்களுக்கு விநியோகித்த பிறகு, ரோஸ்கர் மேளாவில் உரையாற்றிய மோடி, இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு மத்திய அரசு பல முனைகளிலும் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

"உலகளாவிய நிலைமை மிகவும் நன்றாக இல்லை என்பது உண்மைதான். பல பெரிய பொருளாதாரங்கள் போராடி வருகின்றன. பல நாடுகளில், உயர் பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சனைகள் உச்சத்தில் உள்ளன" என்று மோடி கூறினார்.

நூற்றாண்டிற்கு ஒருமுறை வரும் தொற்றுநோயின் பக்க விளைவுகள் 100 நாட்களில் நீங்காது என்றார். நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களை எடுத்துரைத்த பிரதமர் நரேந்திர மோடி, உலக நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியா தன்னால் இயன்றவரை முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற உறுதியை நிறைவேற்றும் வகையில், சுயசார்பு இந்தியா என்ற பாதையில் நாம் முன்னேறி வருகிறோம், நமது கர்மயோகிகளின் முயற்சியால், அரசு துறைகளின் செயல்திறன் அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி கூறினார்.

கடந்த எட்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் இந்தியாவை உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாற்றியுள்ளது என்றார். "இந்தியா இன்று உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 

கடந்த எட்டு ஆண்டுகளில், 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். உலகின் பல பெரிய பொருளாதாரங்கள் பணவீக்கம் மற்றும் வேலையின்மையால் போராடிக்கொண்டிருப்பது உண்மைதான். 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியின் விளைவுகள் 100 நாட்களில் மறைந்துவிடாது.” என்று பிரதமர் கூறினார்.

மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் அபியான் மூலம் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது என்று பிரதமர் கூறினார். இந்த முயற்சிகள் ஏற்றுமதி எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வுக்கு வழிவகுத்துள்ளன. 2014 வரை, நாட்டில் சில நூறு ஸ்டார்ட்அப்கள் மட்டுமே இருந்தன, ஆனால் இன்று அந்த எண்ணிக்கை 80,000ஐ தாண்டியுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.

"இந்தியாவின் இளைஞர்கள் நமது மிகப்பெரிய பலம். ஒளிமயமான எதிர்காலத்திற்காக இந்தியாவின் இளைஞர்களை திறமையாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. ஸ்டார்ட்அப் இந்தியா, நமது நாட்டு இளைஞர்களின் அபிலாஷைகளுக்கு சிறகுகளை வழங்கியுள்ளது" என்று பிரதமர் கூறினார்.

உற்பத்தி மற்றும் சுற்றுலாத் துறை நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றும், இந்தத் துறைகளை விரிவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது என்றும் அவர் கூறினார். காதி மற்றும் கிராமத் தொழில்கள் கிராமப்புற இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று பிரதமர் மோடி கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்