Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செங்கல் சூளை வெடித்து விபத்து.. 9 பேர் பலியான பரிதாபம்..!!

Sekar Updated:
செங்கல் சூளை வெடித்து விபத்து.. 9 பேர் பலியான பரிதாபம்..!!Representative Image.

பீகார் மாநிலம் மோதிஹாரியில் செங்கல் சூளையின் புகைபோக்கி வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 16க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

நீண்டகாலமாக செயல்படாமல் இருந்த புகைபோக்கி, தற்போது முதல் முறையாக இயக்கப்பட்ட நிலையில், புகைபோக்கியில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். அப்போது திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்டது. புகையின் அழுத்தத்தால் புகைபோக்கியின் மேற்பகுதி வெடித்தது. இடிபாடுகளில் சிக்கி இந்த மரணங்கள் நடந்துள்ளன.

இதில், அடியில் புதைந்து ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சிம்னி உரிமையாளரும் உயிரிழந்தார். நள்ளிரவு வரை நீடித்த மீட்புப் பணியில் காயமடைந்த 16 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே புகைபோக்கி வெடிப்புக்கு முக்கிய காரணம், குழாயில் அதிக விறகு எரிந்ததால், புகையின் அழுத்தம் அதிகரித்து, வெடிவிபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. சூளையில் தீ கொளுத்தி ஒரு மணி நேரம் கடந்த நிலையில் புகைபோக்கியின் மேல் பகுதி சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழ ஆரம்பித்ததாக மக்கள் தெரிவித்தனர்.

மக்கள் சிந்தித்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் நேரத்தில், பலர் அதன் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். கீழே தீப்பற்றி எரிந்ததால், பலர் உடல் கருகி, அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்