Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரியாணி கடையில் போதை மாத்திரை....கொத்தாக தூக்கிய போலீஸ்..!

madhankumar July 01, 2022 & 18:51 [IST]
பிரியாணி கடையில் போதை மாத்திரை....கொத்தாக தூக்கிய போலீஸ்..!Representative Image.

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவிற்கு மட்டுமே நோயாளிகளுக்கு வலி நிவாரணி மருந்து கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றல் பின் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும், ஆனால் இதுபோன்ற வலி மாத்திரைகளை சமூக விரோதிகள் பணத்திற்காக போதை பொருட்களாக விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு துரதிருஷ்டவசமாக கல்லூரி மாணவர்கள் அடிமையாகி விடுகிறார்கள்.

இந்த நிலையில் மாணவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் போதை மாத்திரைகளை சட்ட விரோதமாக வாங்கி அதனை நீரில் கரைத்து இன்சுலின் சிரின்சில் எடுத்து அதனை நரம்பு மூலமாக உடலில் ஏற்றி கொள்கிறார்கள். சென்னை தாம்பரம் அடுத்த பல்லாவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  போதை மாத்திரை கும்பல் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை சப்ளை செய்து வருவதால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகி வருவதாக பல்லாவரம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தபடி இருந்தது.

இது குறித்த புகார்களை அடிப்படையாகக் கொண்டு பல்லாவரம் ஏ.சி ஆரோகிய ரவீந்திரன் அவர்களின் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து போதை மாத்திரை சாம்பலை செய்யும் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர், அப்போது பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த ஜவகருல்லா என்பவர் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் ஜவகருல்லா என்பவர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்லாவரம் காவல் நிலையம் அருகே ஜவகருல்லா பிரியாணி கடை வைத்திருப்பதாகவும், அதன் அருகே இருக்கும் கல்லூரி மாணவர்களிடம் சாமர்த்தியமாக பேசி அவர்களுக்கு போதை மாத்திரை தலா ரூ.300க்கு விற்பனை செய்துளளர். இதனையடுத்து பல மாணவர்கள் பழக்கம் கிடைத்துள்ளது அவர்களுக்கு போதை மாத்திரை சாம்பலை செய்துள்ளார். எனவே காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி வளாகத்துக்கு சென்று போதை மாத்திரை விற்பனை செய்வதும், மாலை நேரத்தில் பிரியாணி கடையில் கல்லா கட்டுவதுமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்துளளர்.

இதைத்தொடர்ந்து ஜவகருல்லாவின் கூட்டாளியான அம்பேத்கார் தெருவை சேர்ந்த பவுல் என்ற 21 வயது வாலிபரும் கைது செய்யப்பட்டார். இவர்களுக்கு சேலையூர் பகுதியைச் சேர்ந்த உதயசீலன் (48) என்பவரிடம் இருந்து போதை மாத்திரைகள் வருகிறது என்ற தகவல் கிடைத்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

உதயசீலன், மருந்துக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் போலி ஆவணங்கள் மூலம் மும்பையில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை 10 மாத்திரைகள் 315 ரூபாய் என 15 நாட்களுக்கு ஒரு முறை 1000 முதல் 2000 மாத்திரைகள் வாங்கியுள்ளார். பின்னர் அவற்றை சென்னை புறநகர் பகுதியில் இருந்து செங்கல்பட்டு வரையில் உள்ள பள்ளி, கல்லூரி மணவர்களுக்கு விற்பனை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் இருந்து இருந்து 900 மாத்திரைகள் மற்றும் 1300 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து மூவரும் பல்லாவரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்