Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழக அரசின் அனுமதி இல்லாமல்.. மத்திய அரசு தடாலடி!!

Sekar July 25, 2022 & 17:42 [IST]
தமிழக அரசின் அனுமதி இல்லாமல்.. மத்திய அரசு தடாலடி!!Representative Image.

முல்லைப்பெரியாறு அருகே கேரளா புதிய அணை கட்டவேண்டுமென்றால் அதற்கு தமிழக அரசின் அனுமதி தேவை என்றும், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஒரு செங்கல்லைக் கூட நகர்த்த முடியாது என்றும் கேரள எம்பி ஒருவர் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை இருந்து வருகிறது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் எனும் நோக்கில் கேரளாவில் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக பொய் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வில் அணை உறுதியாக இருப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உத்தரவிட்டது. எனினும் கேரளாவில் உள்ள அரசியல்வாதிகள் அவ்வப்போது சர்ச்சையை கிளம்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது நடந்து வரும் பாராளுமன்றக் கூட்டத்தில், கேரளாவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பியான ஜான் பிரிட்டாஸ் முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதிப்பது குறித்து கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். 

அதற்கு பதிலளித்துள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், 2014 உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி, தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கேரளாவில் தன்னிச்சையாக முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்ட முடியாது எனத் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்