Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாரிசா? துணிவா?.... அண்ணாமலை கொடுத்த ‘நச்’ பதில்! 

KANIMOZHI Updated:
வாரிசா? துணிவா?.... அண்ணாமலை கொடுத்த ‘நச்’ பதில்! Representative Image.

நடிகர்கள் விஜய், அஜித் இருவரையும் தனக்கு பிடிக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

 

திண்டுக்கல்லில் பாரதீய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு  பிரிவு மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் நடிகர்கள் விஜய், அஜித் இருவரில் யாரை உங்களுக்கு அதிகம் பிடிக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. 

 

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, எனக்கு விஜய், அஜித் இருவரையும் பிடிக்கும். நடிகர் அஜித் உடைய உழைப்பு அசாத்தியமானது. ஒரு சாமானிய மனிதன் எந்தவொரு சப்போர்ட்டும் இல்லாமல் திரைத்துறையில் இப்படியொரு இடத்தை பிடிப்பது சாதாரண விஷயமல்ல. அவர் சாமானிய மக்களுக்கு ரோல் மாடல். 

 

விஜய் நடித்த முதல் படத்தை நான் பார்த்திருக்கேன். இப்போது நடிப்பில் மிரட்டி வருகிறார். அடிக்கடி தியேட்டருக்கு போய் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனாலும் விஜய்யின் சமீபத்திய படங்களைப் பார்க்கும் போது அவர் நடிப்பில் எப்படி மெருகேறியுள்ளார் என்பதை தெரிகிறது. விஜய் நடிப்பில் மிரட்டியிருக்காரு, பிரம்மாண்டமா இருக்கு. அசத்தியமாக டான்ஸ் ஆடுகிறார். 

 

துணிவாய் இருப்பேன் வாரிசு அரசியலை எதிர்ப்பேன் எனக்கூறிய அண்ணாமலை, நேரம் கிடைக்கும் போது வாரிசு, துணிவு இரண்டு படத்தையும் தியேட்டருக்குச் சென்று பார்ப்பேன் என்றார். இரண்டு நடிகர்கள் மீதும் எனக்கு மிகப்பெரிய அபிமானம் உள்ளது. ஆனால் இரண்டு பேரின் ரசிகர்களும் சண்டையிட்டுக் கொள்வது பிடிக்கவில்லை. விஜய், அஜித் எப்படி திரையுலகில் ஜென்டில் மேனாக செயல்படுகிறார்களோ? அதேபோல் அவர்களுடைய ரசிகர்களும் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்