Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாநிலம் முழுவதும்.. தொடங்கியது பாஜகவின் உண்ணாவிரதப் போராட்டம்!!

Sekar July 05, 2022 & 13:29 [IST]
மாநிலம் முழுவதும்.. தொடங்கியது பாஜகவின் உண்ணாவிரதப் போராட்டம்!!Representative Image.

சமையல் கேஸ் மானியம் ரூ.100, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உள்ளிட்ட பல ஜனரஞ்சக வாக்குறுதிகளை கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்திருந்த நிலையில், அவற்றை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பாஜக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

2021 சட்டசபைத் தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவை வீழ்த்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரியணை ஏறியது. திமுக அரியணை ஏற உதவியாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை, சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் உள்ளிட்ட பல்வேறு ஜனரஞ்சக அறிவிப்புகள் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், திமுக ஆட்சியமைத்து ஒருவருடத்திற்கு மேல் ஆகியும், இதில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பாஜக குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் திமுக சொன்னபடி தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிளிலும் காலை முதல் மாலை வரை, பாஜவினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகில் நடக்கும் போராட்டத்தில் தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். 

இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்