Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

எல்லைக்கு பாதுகாப்பு படை எதற்கு..? காரணமும் பின்னணியும்...

Nandhinipriya Ganeshan Updated:
எல்லைக்கு பாதுகாப்பு படை எதற்கு..? காரணமும் பின்னணியும்...Representative Image.

இந்திய நாட்டின் பாதுகாவலர் படைக்கு ஒரு உறுதுணை படையாக எல்லை பாதுகாப்பு படை செயலாற்றி வருகிறது. இந்த படையினை 'துணை ராணுவப்படை' என்றும் அழைப்பார்கள். நம் இந்திய நாடு, ஆப்கானிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம், பூடான், மியான்மர் ஆகிய நாடுகளுடன் பொதுவான நில எல்லைகளை பகிர்ந்துள்ளது. அதேபோல், இலங்கையுடன் பொதுவான கடல் எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது. அந்தவகையில், இந்தியாவின் எல்லைப் பகுதிகளை பாதுகாப்பதற்காக 1965 ஆம் ஆண்டு இந்த 'எல்லை பாதுகாப்பு படை' அமைக்கப்பட்டது. மேலும், 1968 ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படை சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது.

எல்லைக்கு பாதுகாப்பு படை எதற்கு..?

1965 ஆம் ஆண்டு முன்புவரை இந்திய எல்லைப் பகுதிகளை அந்தந்த மாநில காவல் படைகளே பாதுகாத்து வந்தன. எல்லைப் பகுதிகளுக்கு உட்பட்ட மக்களின் உடமைகளை பாதுகாப்பது, கள்ளக் கடத்தல் சம்மந்தமான நடவடிக்கைகளை தடுப்பது போன்ற நடவடிக்கைகளையும் மாநில காவல் படையே காண்காணித்து வந்தது. எல்லையில் ஏதாவது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு  அத்துமீறல் நடந்தால் இந்திய ராணுவமும், மத்திய ரிசர்வ் காவல் படையும் குறிப்பிட்ட காலத்திற்கு மாநில காவல்படையை வழிநடத்தி செல்லும். இருந்தாலும், இந்த முறையில் சில குறைபாடுகள் காணப்பட்டு வந்தன. திருப்தியில்லாத காரணத்தால்  குஜாரத், ஜம்மு&காஷ்மீர் போன்ற எல்லை மாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின. 

கடைசியில், 1962ம் சீனாவுடனான  எல்லைப் போரில்  இந்தியா படுதோல்வியை சந்தித்தது. சீனப்படைகளை இந்திய நிலைகளை வீழ்த்தின. இதைக் கண்டு அப்போதைய பிரதமர் உடைந்து நொறுங்கிப்  போனார். நேருவின் மறைவுக்குப் பிறகு, இந்தியாவில் நிலவிய அரசியல் சூழலை அண்டை நாடான பாகிஸ்தான் தனது சாதகமாக பயன்படுத்தத் தொடங்கியது. அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை பாகிஸ்தான் மிகவும் தவறாக மதிப்பிட்டது.

1947- 48 இந்திய-பாகிஸ்தான் எல்லை போரில் இழந்ததை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள நினைத்த பாகிஸ்தான் குஜராத் எல்லை  வழியே தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கியது. 1965 ஏப்ரல் 9ம்  தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள சார் பெட் , சர்தார் போஸ்ட் மற்றும் பெரியா பெட் ஆகிய  பகுதிகளை பாகிஸ்தான் இராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவமும், ரிசர்வ் படையும் களத்தில் இறங்கின.

இழந்த பகுதிகளை மீட்டெடுத்தன. அதனைத் தொடர்ந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1965 நடந்து முடிந்தது. அதனையடுத்து இந்திய சர்வதேச எல்லைப் பகுதியை பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படை என்ற வலிமையான படை டிசம்பர் 1, 1965 அன்று உருவாக்கப்பட்டது. இதன் முதல் தலைமை இயக்குநராக கே எஃப் ரஸ்டம்ஜி பொறுப்பேற்றார். அந்தவகையில், நம் இந்திய எல்லை பாதுகாப்பு படை உருவாகி 57 வருடத்தை கடந்து 58வது ஆண்டியில் அடியெடுத்து வைத்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்