Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Udhayanidhi Stalin : கலகத் தலைவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

Manoj Krishnamoorthi Updated:
Udhayanidhi Stalin : கலகத் தலைவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!Representative Image.

தமிழ் திராவிடத்தின் ஆதியான அண்ணாவின் கருத்தில் உதித்த  இத்தலைமுறையின் கருணாநிதியா..! யார் இவர்?  வாரிசு அரசியல் என்னும் சாயம் தன்னை சுற்றி பகைமை பூசுகையில் உதிக்கும் பரிதியாய் ஜொலிக்கும் இத்தலைமுறையின் இளம் திராவிட போராளியா..! இப்படி பல கேள்விக்கு பதிலாக மிளிரும் பகுத்தறிவு களஞ்சியத்தின் சாயலா...! இதுகுறித்து இந்த பதிவில் அறியலாம்.

Udhayanidhi Stalin : கலகத் தலைவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!Representative Image

உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin Special)

தமிழ்நாட்டின் முக்கிய பிரமுகர் வீட்டின் வாரிசு என்ற போர்வையில் வாழாத ஒரு எளியவன் நம் பதிவின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் ஆவார். ஆம், இவரின் ஆரம்பக் கால வாழ்க்கை சாதாரண இளைஞன் போல் காதல், கல்யாணம், குடும்பம் என்ற சாமானியன் சக்கரம் தான். பின் எப்படியொரு எழிர்ச்சி..? பார்ப்போம். 

முன்னாள் முதலமைச்சரான மு.கருணாநிதி பேரனும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் மகன் ஆவார். 1977 ஆம் ஆண்டு சென்னையில் நவம்பர் 27 ஆம் நாள் ஸ்டாலின் மற்றும் துர்கா அவர்களின் மகனாக தமிழ் மண்ணில் உதித்தார். ஆனால் தன் பின்புலத்தை எங்கும் பயன்படுத்தாத எளிமையானவனாகவே வளர்ந்தார்.  தன் காதலையும் துணையாக (கிருத்திகா) மாற்றியவரை சாமானியனாகவே வாழ்ந்துள்ளார்.

Udhayanidhi Stalin : கலகத் தலைவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!Representative Image

தன் நெருங்கிய வட்டத்துடன் மட்டுமே தொடர்பில் இருந்த இளம் திராவிட நாயகன், தமிழ் மக்களுக்கு அறிமுகமான முகம் தயாரிப்பாளர் ஆகும். "ரெட் ஜெயிண்ட்ஸ் மூவிஸ்" என்ற  தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நடிகர் விஜய், த்ரிஷா நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த 'குருவி' படத்தின் மூலம் நமக்கு பரிச்சியமானார். 

Udhayanidhi Stalin : கலகத் தலைவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!Representative Image

சினிமாவில் இருந்த காதல் இவரின் அடுத்த பரிமாணத்தை நடிகனாக மாற்றியது. 2012 ஆம் ஆண்டு "ஒரு கல் ஒரு கண்ணாடி" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக வெள்ளித்திரையில் நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்தார்.  காதல்  நாயகனாகத் திரையில் சராசரி இளைஞனாக தோன்றினாலும் சமூக அக்கறையைக் கையில் எடுத்து மனிதன், கண்ணே கலைமானே, நெஞ்சுக்கு நீதி போன்ற சமுக படத்தில் நடித்தார். திரையில் வழக்கமான சினிமாவை காட்டாமல் சமுக சீர்திருத்தத்தை இவர் வெளிக்காட்டிய விதமே இவர் திராவிட அரசியலின் ஆரம்பம் ஆகும். 

Udhayanidhi Stalin : கலகத் தலைவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!Representative Image

திரையில் கதாநாயகனாக மட்டும் தன் பயணம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டு அரசியல் பிரவேசம் கொண்டார்.  தான் திரையில் ஜோலிக்கும் நட்சத்திரம் இல்லை சமுக சீர்திருத்தச் சூரியன் என்னும் வகையில் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் வெளிக்காட்டினார்.  இதன் விளைவு கழகம் இவரை திமுக இளைஞர் அணி செயலாளராக ஏற்றுக்கொண்டது.  

பின்னர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில்  2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக களமிறங்கினார். தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலே 93285 வாக்குகள் பெற்று 67.89% வெற்றி பெற்றார். வெள்ளித்திரையில் சமூக சீர்திருத்தம் கருத்தை வெளிப்படுத்தியவன் இளம்தலைவனாக சட்டமன்றத்தில் பிரவேசம் கொண்டார். 

அரசியலில் ஈடுபட்டாலும் சினிமாவின் காதலை விடாமல் அவ்வப்போது நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன் போன்ற சமுக அக்கறை படத்தின் வாயிலாக மக்களிடம் தன் கருத்தை பதியவைக்கும் இளம் திராவிட தலைவன் ஆவார்... திரு. உதயநிதி ஸ்டாலின்!   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்