Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஸ்டார்பக்ஸ்-ன் விளம்பரத்தால் காபி ஜெயன்ட் பின்னடைவு.. சமூக ஊடகங்களில் பரவும் கடுமையன விமர்சனங்கள்.!

Gowthami Subramani Updated:
ஸ்டார்பக்ஸ்-ன் விளம்பரத்தால் காபி ஜெயன்ட் பின்னடைவு.. சமூக ஊடகங்களில் பரவும் கடுமையன விமர்சனங்கள்.! Representative Image.

ஸ்டார்பக்ஸ் இந்தியா ஆனது, சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் திருநங்கைகளை ஏற்றுக் கொள்வது போல விளம்பரத்தை வெளியிட்டது. இது சமூக ஊடகங்களில் மிகக் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்ததோடு, காபி ஜெயன்ட் ஆன ஸ்டார்பக்ஸ் பின்னடைவைப் பெறுகிறது.

ஸ்டார்பக்ஸ் சமீபத்தில் வெளியிட்ட விளம்பரம் ஒன்றில், திருநங்கைகளின் புரிதலையும், அவரை ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் இருக்குமாறு அமைந்தது. அந்த விளம்பரத்தில், திருநங்கை ஒருவர் தனது நீண்ட காலப் பிரிவிற்குப் பின் தனது பெற்றோருடன் மீண்டும் இணையுமாறு அந்தக் கதை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தாய், தந்தை இருவரும் காபி ஷாப் ஒன்றில் தங்கள் குழந்தைக்காக காத்திருக்கின்றனர். அவரது மகனின் பெயர் அர்பித். அவர் ஒரு திருநங்கை. இவர், அர்பிதா என்று தன் பெயரை மாற்றினார். குழந்தையின் முடிவைப் பற்றி தந்தை வருத்தமாகவும், சங்கடமாகவும் இருக்கிறார். அதே சமயம், தாய், தயவு செய்து இந்த நேரத்தில் கோபப்பட வேன்டாம். கேளுங்கள் என ஆறுதல் செய்கிறார்.

அப்போது, அங்கு வந்த அர்பிதா காபி ஷாப்பிற்கு வரும் போது தாயை அணைத்து தனது அன்பைப் பரிமாறிக் கொள்கிறார். மேலும் அர்பிதா தனது தந்தையை அணுகுகிறார். ஆனால், தந்தை அடக்கமான புன்னகையைப் பரிமாறிக் கொள்கிறார். இது அவரது ஆரம்ப கால சங்கடத்தை சித்தரிப்பதாக உள்ளது. மேலும், ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் இன்னும் எனக்கு உலகத்தையே குறிக்கிறீர்கள் என அர்பிதா தன் அப்பாவிடம் கூறுகிறார்.

பிறகு அர்பிதாவின் அப்பா, ஒரு கணம் யோசித்து விட்டு, ஆர்டர் செய்யக் கிளம்பி விட்டார். அப்போது காபி கொடுக்க, அப்ரிதாவுக்கு 3 குளிர் காபி என்று கூறினார். அன்பிற்குரிய ஸ்டார்பக்ஸ் பாரம்பரியத்தைப் பின்பற்றிய காபி கோப்பையில் அர்பிதா என்ற பெயர் எழுதிக் கேட்டுக் கொண்டுள்ளார். அர்பிதாவின் தந்தை அவர் பெயரை எழுதி, அவரது அடையாளத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டார் என்பது கூறப்படுகிறது.

அப்போது அவர்களது அப்பா,”பேட்டா, நீ எப்போதும் என் குழந்தையாகவே இருப்பாய். உன் பெயரில் ஒரே ஒரு எழுத்துத் தான் சேர்ந்து வந்துள்ளது” என்று சமாதானப்படுத்துகிறார்.

உங்கள் பெயர் நீங்கள் யார் என்பதைக் குறிக்கிறது. அது அர்பிதா அல்லது அர்பித். ஸ்டார்பக்ஸில் நீங்கள் யார் என்பது நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் மற்றும் ஏற்றுக்கொள்கிறோம். இத்துடன் ItStartsWithYourName என்ற Hashtag உடன் ஸ்டார்பக்ஸ் இந்தியா ட்வீட் செய்தது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்