Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

40 ஆண்டுகளில் இல்லாத உயர்வு..உச்சம் தொட்ட பணவீக்கம்..!!

Sekar August 17, 2022 & 16:01 [IST]
40 ஆண்டுகளில் இல்லாத உயர்வு..உச்சம் தொட்ட பணவீக்கம்..!!Representative Image.

பிரிட்டனின் பணவீக்க விகிதம் கடந்த ஜூலையில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது அந்த நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலையில் பிரிட்டனின் பணவீக்க விகிதம் 10.1% ஆக உயர்ந்தது. உணவு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளின் விலைகள் அதிகரித்து வருவதால், செலவு நுகர்வோரின் கழுத்தை நெருக்கி வருகிறது. 

பிரிட்டனின் தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஜூலை மாத நுகர்வோர் விலை பணவீக்கம் 10.1% என இரட்டை இலக்கங்களை எட்டியது. இது ஜூன் மாதத்தில் 9.4% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. உணவு மற்றும் டாய்லெட் பேப்பர், டூத் பிரஷ் உள்ளிட்ட முக்கியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் இன்னும் மோசமான சூழலை பிரிட்டன் விரைவில் எதிர்கொள்ளும் என்று நம்புகிறார்கள். பாங்க் ஆஃப் இங்கிலாந்து, இயற்கை எரிவாயு விலைகள் அதிகரித்து வருவது அக்டோபர் மாதத்தில் நுகர்வோர் விலை பணவீக்கத்தை 13.3% ஆக உயர்த்தும் என்று கூறுகிறது. 

இது 2023 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் ஒரு பொருளாதார மந்தநிலையில் பிரிட்டனைத் தள்ளும் என்று அது கூறுகிறது. இந்த காரணங்களால் பிரிட்டன் மத்திய வங்கியின் பணவியல் கொள்கைக் குழு அதன் முக்கிய வட்டி விகிதத்தை இந்த மாதம் 0.5 சதவீத புள்ளிகள் உயர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இது டிசம்பருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஆறு அதிகரிப்புகளில் மிகப்பெரியது ஆகும். இதன் மூலம் இப்போது வட்டி விகிதம் 1.75% ஆக உள்ளது. இது 2008 இன் பிற்பகுதியில் உலகளாவிய நிதி நெருக்கடிக்கு பிந்தைய மிக அதிகபட்ச உயர்வாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்