Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இஸ்லாமிய தீவிரவாதம் வேரறுக்கப்படும்.. பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் அதிரடி!!

Sekar August 03, 2022 & 18:41 [IST]
இஸ்லாமிய தீவிரவாதம் வேரறுக்கப்படும்.. பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் அதிரடி!!Representative Image.

பிரிட்டனில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கியுள்ள இந்திய வம்சாவளி ரிஷி சுனக், இங்கிலாந்தின் மிக குறிப்பிடத்தக்க பயங்கரவாத அச்சுறுத்தலாக இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்குவதாக உறுதியளித்தார்.மேலும் தற்போதுள்ள பயங்கரவாத சட்டத்தை வலுப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.

42 வயதான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுன்னத், பிரதமர் பதவிக்கான போட்டியின் இறுதிக் கட்டத்தில் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸுடன் மோதுகிறார். இந்நிலையில் ரிஷி சுனக், இங்கிலாந்தில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் அமைப்புகளை களையெடுப்பதாகவும், இஸ்லாமிய தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்பதாகவும் சபதம் செய்துள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தீவிர பிரச்சாரத்தில் இருக்கும் சுனக் கூறுகையில், “ஒரு பிரதமருக்கு நமது நாட்டையும் மக்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதை விட முக்கியமான கடமை வேறு எதுவும் இல்லை.

இஸ்லாமிய தீவிரவாதத்தை சமாளிப்பதற்கான நமது முயற்சிகளை இரட்டிப்பாக்கவோ அல்லது நம் நாட்டை வெறுப்பதாக குரல் கொடுப்பவர்களை வேரறுக்கவோ, அந்த கடமையை நிறைவேற்ற நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். 

பிரிட்டன் சுதந்திரம், சகிப்புத்தன்மை மற்றும் பன்முகத்தன்மையின் கலங்கரை விளக்கமாக உள்ளது. நமது வாழ்க்கை முறையை சீர்குலைத்து அழிக்க முயல்பவர்களை ஒருபோதும் வெற்றிபெற விடக்கூடாது.'' என்றார்.

மேலும் Ready4Rishi பிரச்சாரக் குழு, இஸ்லாமிய தீவிரவாதத்தை சமாளிப்பதற்கும், பயங்கரவாதத்திலிருந்து பிரிட்டனைப் பாதுகாப்பதற்கும் லட்சிய திட்டங்கள் என்று அழைக்கப்படும் விவரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்