Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கௌரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணை ரத்து...பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!

madhankumar July 03, 2022 & 11:50 [IST]
கௌரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணை ரத்து...பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!Representative Image.

தமிழகத்தில் கல்வித்துறையில் மிகப்பெரிய அதிரடி மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 2022-23 கல்வியாண்டிற்கு ஏப்ரல் 2, 2022 முதல் மார்ச் 2023 வரை 11 மாதங்களுக்கு அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டப்பட்டது. 


அதன் பின்னர் கல்லூரி கல்வி இயக்குனரின் செயல்முறை படி நிர்வாக காரணங்களுக்காக மாற்றுப் பணியில் பணி புரியலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் கௌரவ விரிவுரையாளர்களின் மாற்று பனியனை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கௌரவ விரிவுரையாளர்களின் பணி ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கௌரவ விரிவுரையாளர்களின் பணி ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அதே போல் அரசுப் பள்ளிகளில் 2ம் நிலை , முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பள்ளி நிர்வாகக் குழு மூலம்  நியமிக்க தமிழக அரசு உத்தரவு  பிறப்பித்திருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவுக்கு தடை விதித்து நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க அறிவுறுத்தியுள்ளது. தற்போது தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்  திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகளை  சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில்  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து வந்த புகார்களால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்