Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீட் விலக்கு முதல் மின்சார மசோதா ரத்து வரை.. அமித் ஷா முன்பு அதிரடி காட்டிய ஸ்டாலின்!!

Sekar September 03, 2022 & 15:55 [IST]
நீட் விலக்கு முதல் மின்சார மசோதா ரத்து வரை.. அமித் ஷா முன்பு அதிரடி காட்டிய ஸ்டாலின்!!Representative Image.

நீட் தேர்வு விலக்கு, மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளத்தில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடந்தது. கடந்த ஆண்டு அமைச்சர் பொன்முடியை அனுப்பி வைத்த முதல்வர் ஸ்டாலின், இடஙக முறை தானே நேரடியாக பங்கேற்றார்.

மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியது பின்வருமாறு :- தென்மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை தாங்குவது பாராட்டக்க முயற்சி. இந்த மாநாடு தென்னகத்தில் உள்ள அண்டை மாநிலங்கள் உடனான எங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரு நேர்மறையான அணுகுமுறையாக நான் கருதுகிறேன். இதை ஏற்பாடு செய்தமைக்காக நான் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்தியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதே எங்கள் குறிக்கோள். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் இதை முன்மொழிந்தபோது, ​​நாங்கள் சிறுபான்மையினராக இருந்தோம். ஆனால் இன்று, அனைத்து மாநில அரசுகளும், பிராந்தியக் கட்சிகளும் இதை ஏற்றுக்கொண்டுள்ளன. 

எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில், தமிழகத்தில் திராவிட மாடலை உருவாக்கி இருக்கிறோம். மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழகத்தில் பல முக்கிய நலத் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இந்த நேரத்தில் மத்திய அமைச்சரிடம் சில கோரிக்கைகளையும் முன்வைக்க விரும்புகிறேன்.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநில அரசுகளின் நிதி சுயாட்சி பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். தமிழகத்திற்கான பேரிடர் நிவாரண நிதி மற்றும் பிற நிதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற, மத்திய உள்துறை அமைச்சர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசுகள் விமான நிலையங்களை அமைப்பதற்காக நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு இலவசமாக கையகப்படுத்தி வழங்கும். எதிர்காலத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் சொத்துகளை மூன்றாம் தரப்பினருக்கு மாற்றினால், மாநில அரசுகள் செய்த பெரும் முதலீட்டைக் கருத்தில் கொண்டு, சொத்துக்களை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் மதிப்பை மாநில அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பயணிகள் போக்குவரத்தில் சராசரி பயண வேகத்தை அதிகரிக்க, குறிப்பிட்ட இடங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் பாதையை உருவாக்க வேண்டும். புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மின்சார சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மேலும் குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பேசினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்