Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வட மாநில தொழிலாளர்கள் குறித்த தவறான வீடியோ தகவல் பரப்பியதாக பிரபல யூடியூபர் மீது புகார்!

Gowthami Subramani Updated:
வட மாநில தொழிலாளர்கள் குறித்த தவறான வீடியோ தகவல் பரப்பியதாக பிரபல யூடியூபர் மீது புகார்!Representative Image.

தமிழகத்தில் தற்போது பெரும்பாலும் பேசிக்கொண்டிருக்கும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த தவறான வீடியோக்களை தயார் செய்து பரப்பியதாக பிரபல யூடியூபர் மீது புகார் எழுந்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே, வட மாநில தொழிலாளர்கள் குறித்த சர்ச்சை வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இதில் தவறான வீடியோவை பதிவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. பிரபல யூடியூபர் கோபி மற்றும் சுதாகர் அவர்கள், தமிழர்கள் செய்ய மறுக்கும் வேலைகளை குறைந்த ஊதியத்துக்கு வட மாநிலத்தவர்கள் செய்வதையும், முன்பதிவு செய்யப்பட்டுள்ள ரயில் இருக்கைகளை ஆக்கிரமிப்பது, கட்டுமானத் தொழிலுக்கு தாங்கள் செல்கிறோம் என்ற வகையில் இவர்கள் வீடியோ ஒன்றை காமெடியாகப் பதிவிட்டிருந்தனர்.

வட மாநில தொழிலாளர்கள் குறித்த தவறான வீடியோ தகவல் பரப்பியதாக பிரபல யூடியூபர் மீது புகார்!Representative Image

இந்த வீடியோவை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவரான ஸ்ரீனிவாசன் சுட்டிக்காட்டி, ஒரு சில இடங்களில் நடக்கும் தவற்றினைக் கருத்திக் கொண்டு, ஒட்டு மொத்த  வட மாநில தொழிலாளர்கள் மீதும் வன்மத்தை ஏற்படுத்துவது தவறானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களின் யூடியூப் சேனலைத் தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியும், கோபி, சுதாகர் யூடியூப் சேனலுக்கு தடை விதிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். சமீபத்தில், கோபி மற்றும் சுதாகர் ஆகியோருக்கு அண்ணா பல்கலையில் நடந்த விழாவில் அமைப்பு ஒன்றின் மூலம் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்