Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rain Update : உஷார் மக்களே.. தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

Muthu Kumar June 23, 2022 & 17:00 [IST]
Rain Update : உஷார் மக்களே.. தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!Representative Image.

Rain Update : தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

சென்னையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் வெப்பம் காரணமாக மக்கள் அவதி பட்டனர். இந்நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான தட்ப வெட்பம் =இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதன்படி, இன்று முதல் 27 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நாளை முதல் 2 நாட்களுக்கு கன்னியாக்குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்