Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விரைவில் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3 விண்கலம்..! இஸ்ரோ தலைவர் அறிவிப்பு..!!

Saraswathi Updated:
விரைவில் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3 விண்கலம்..! இஸ்ரோ தலைவர் அறிவிப்பு..!!Representative Image.

நிலவை ஆய்வு செய்வதற்காக 615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் இந்த மாதம் 13ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

பூமிப்பரப்பில் இருந்து சுமார் 3 லட்சத்து 84ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ நிறுவனம் பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தி உலக நாடுகளை இஸ்ரோ திரும்பிப் பார்க்க வைத்தது. சந்திரயான்-1 மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதன் தென்துருவத்தில் ஆய்வு நடத்தும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. ஆனால், எதிர்பார்த்தபடி சந்திரயான்-2 விண்கலம் வெற்றிபெறவில்லை. 

இதையடுத்து, 615 கோடி ரூபாய் திட்டத்தில் சந்திரயான்-3யை உருவாக்கும் பணியை இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டுவந்தது. தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் வரும் 13ம் தேதி சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள் சத்தீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 13ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாயும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், இது குறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான்-3 விண்கலத்தை வரும் 13ம் தேதி விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்த முயற்சி ஜூலை 19ம் தேதி வரை நீடிக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்