Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கணக்கில் வராத ரூ.200 கோடி.. வருமான வரித்துறை அறிக்கை!!

Sekar August 06, 2022 & 16:12 [IST]
கணக்கில் வராத ரூ.200 கோடி.. வருமான வரித்துறை அறிக்கை!!Representative Image.

சமீபத்தில் சென்னையில் சினியா பைனான்சியர்கள் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட தொடர் சோதனையில், கணக்கில் வராத ரூ.200 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல்ராஜா, தியாகராஜன் மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய சில இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 4 நாட்களாக தொடர் சோதனை நடத்தினர். 

சென்னை மட்டுமல்லாது மதுரை உள்ளிட்ட சில இடங்களிலும் இந்த சோதனை நடந்துள்ளதாக தகவல் வெளியானது. மொத்தம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்துள்ளது.

இந்நிலையில் இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சோதனையில், கணக்கில் வராத ரூ.200 கோடி மதிப்புள்ள வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரொக்கம் ரூ.36 கோடி மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அன்புச்செழியனுக்கு தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், தியேட்டர் வருமானத்தை குறைத்து காண்பித்து பல கோடி வருமானத்தை மறைத்ததற்கான ஆவணங்கள், பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்த கணக்கில் வராத கடன்கள், பிராமிசரி நோட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன." எனத் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்