Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னைக்கு புதிய ரயில் சேவை - 13 ஆண்டுக்குப் பிறகு போடியில் இருந்து புறப்பட்டது..!

Saraswathi Updated:
சென்னைக்கு புதிய ரயில் சேவை - 13 ஆண்டுக்குப் பிறகு போடியில் இருந்து புறப்பட்டது..! Representative Image.

தேனி மாவட்டம் போடியில் இருந்து  13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு ரயில் சேவை தொடங்கியுள்ளது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இந்தச் சேவையை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.  

தேனி போடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இடையிலான  புதிய ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நேற்றிரவு தொடங்கி வைத்தார். இதற்கான அதிவேக சோதனை ஓட்டம் முன்னதாக மதுரை - போடி இடையே நடந்தது. 20602 என்ற வண்டி எண் கொண்ட இந்த ரயிலானது, செவ்வாய், வியாழன், ஞாயிற்று கிழமைகளில் இயக்கப்படுகிறது.  குறிப்பிட்ட நாட்களில் இந்த ரயிலானது இரவு 8:30 மணிக்கு போடியிலிருந்து கிளம்பும் இந்த ரயில் மறுநாள் காலை 7:55 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையம் சென்றடையும். இந்த ரயிலானது தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி வழியாக சென்னை செல்கிறது. 

சென்னையில் இருந்து போடிக்கு மறுமார்க்கத்தில் (வண்டி எண் 20601)  திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10:30 மணிக்கு புறபட்டு மறுநாள் காலை 9:35 மணிக்கு இந்த ரயில் போடி சென்றடையும்.  

இந்த ரயிலில் இரண்டு முன்பதிவில்லா பெட்டிகள், படுக்கை வசதி முன்பதிவு பெட்டிகள் 4, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 7, இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 2, முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டி 1 என 18 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.  

இதற்கான சோதனை ஓட்டத்தின்போது  மதுரை - போடி 91 கி.மீ., அகல ரயில் பாதையில் தண்டவாள அதிர்வுதிறன், ட்ராக் பாராமீட்டர் சோதனை உள்ளிட்டவை குறித்துஆய்வு செய்யப்பட்டது.  இந்த சோதனை ரயிலானது நேற்றுமுன்தினம் காலை 10:00 மணிக்கு மதுரையில் புறப்பட்டு போடிக்கு காலை 11:05க்கு வந்துசேர்ந்தது.  

இந்த ஆய்வில் மதுரை ரயில்வே கோட்ட மூத்த பொறியாளர் நாராயணன், உதவி கோட்ட பொறியாளர் வெள்ளைத்துரை, முதுநிலை பொறியாளர் விவேக், சப் சென்டர் உதவி பொறியாளர் அஞ்சனா ஆகியோர் 2 கூடுதல் பெட்டிகளுடன் இறுதி கட்ட சோதனையாக தண்டவாளங்களின் அதிர்வுத் திறன், மனித இடையூறுகள் குறித்து ஆய்வு
மேற்கொண்டனர். 

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை (ரயில் எண் : 20602) நேற்றிரவு  இரவு 8:30 மணிக்கும், போடி - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை (ரயில் எண்: 06702) நேற்றிரவு 8:45 மணிக்கும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தேனி தொகுதி அதிமுக எம்.பி.,ரவீந்திரநாத், முன்னாள் முதலமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்