Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில்: புறப்படும் நேரம், டிக்கெட் விலை மற்றும் முழு விவரங்கள்..! | Chennai To Mysore Vande Bharat Train

Gowthami Subramani Updated:
சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில்: புறப்படும் நேரம், டிக்கெட் விலை மற்றும் முழு விவரங்கள்..! | Chennai To Mysore Vande Bharat TrainRepresentative Image.

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே ‘வந்தே பாரத் திட்டம்’ என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆனது, இந்தியாவின் இரண்டாவது அதிவேக ரயில் ஆகும். முதலாவது இடத்தில் இருப்பது கதிமான் எக்ஸ்பிரஸ் ஆகும். வந்தே பாரத் ஆனது ரயில் 18 எனவும் அழைக்கப்படுகிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புது வித அனுபவத்தை கொடுக்கிறது. இந்த வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, Wi-Fi வசதி, GPS, ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன.

கடந்த நவம்பர் 10, 2022 அன்று இந்தியாவின் ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை முதல் மைசூரு வரை இயக்கப்பட்டது. இந்த ரயில் அதே பாதையில் செல்லக்கூடிய மற்ற இரயில்களை விட முன்னதாகவே எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்- இருந்து மைசூருக்கு சென்றடைந்து விடுகிறது. இந்த பதிவில் MGR சென்னை சென்ட்ரல் – மைசூர் வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிவரங்களைப் பார்க்கலாம்.

வழி

இந்த ரயில் வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து ஆறு நாள்களும் இயக்கப்படுகிறது. எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – மைசூர் செல்லும் இந்த வந்தே பாரத் ரயில் காட்பாடி ஜங்ஷன், கேஎஸ்ஆர் பெங்களூரு சிட்டி ஜங்ஷன் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். பொதுவாக எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – மைசூரின் பயண நேரம் பயணம் செய்யும் இரயில்களைப் பொறுத்து மாறுபடும். அதன் படி, 9 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. ஆனால், வந்தே பாரத் இரயில் ஆனது 6 மணி நேரம் 30 நிமிடங்களிலேயே சென்று விடுகிறது.

வந்தே பாரத் இரயில்

துவங்கப்பட்ட நாள்

இயங்கும் நாள்

தூரம்

பயண நேரம்

புறப்படும் / வந்தடையும் நேரம்

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மைசூர் [எண்: 20607]

 

மைசூர் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் [எண்: 20608]

நவம்பர் 10, 2022

புதன்கிழமை தவிர மற்ற ஆறு நாள்கள் இயங்கும்

497கிமீ.

6 மணி 30 நிமிடங்கள்

05.50 AM – 12.20 PM

 

 

01.05 PM – 07.30 PM

 

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மைசூர் [எண்: 20607] வந்தே பாரத் நேர அட்டவணை:

20607 ஆன எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் முதல் மைசூர் செல்லும் வந்தே பாரத் இரயில் ஆனது, காலை 05.50 மணிக்குப் புறப்பட்டு, காட்பாடி ஜங்ஷனுக்கு காலை 07.21-க்கு வந்தடைகிறது. பிறகு, காலை 07.25 மணிக்கு புறப்பட்டு 10.15 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூரு சிட்டி ஜங்ஷனுக்கு வந்தடைந்து, பின் 10.20 மணிக்குப் புறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மைசூர் ஜங்ஷனுக்கு 12.20 மணிக்கு வந்தடைகிறது.

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மைசூர் [எண்: 20607]

 

வந்தடையும் நேரம்

இரயில்வே நேரம்

புறப்படும் நேரம்

இரயில்வே நேரம்

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்

-

05.50

காட்பாடி ஜங்ஷன்

07.21

07.25

கேஎஸ்ஆர் பெங்களூரு சிட்டி ஜங்ஷன்

10.15

10.20

மைசூர் ஜங்ஷன்

12.20

-

 

மைசூர் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் [எண்: 20608] வந்தே பாரத் நேர அட்டவணை:

20608 எண் கொண்ட மைசூர் முதல் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் இரயில் ஆனது மைசூர் ஜங்ஷனில் இருந்து மதியம் 01.05 மணிக்குப் புறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கேஎஸ்ஆர் பெங்களூரு சிட்டி ஜங்ஷனுக்கு மதியம் 02.50 மணிக்கு வந்தடைந்து, மீண்டும் 02.55 மணிக்கு புறப்படுகிறது. மேலும், மாலை 05.36 மணிக்கு காட்பாடி ஜங்ஷனுக்கு வந்தடையும் இந்த இரயில் மாலை 05.40 மணிக்கு மீண்டும் புறப்படுகிறது. இவ்வாறு, எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலுக்கு இரவு 07.30 மணிக்கு வந்தடைகிறது.

மைசூர் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் [எண்: 20608]

வந்தடையும் நேரம்

இரயில்வே நேரம்

புறப்படும் நேரம்

இரயில்வே நேரம்

மைசூர் ஜங்ஷன்

-

13.05

கேஎஸ்ஆர் பெங்களூரு சிட்டி ஜங்ஷன்

14.50

14.55

காட்பாடி ஜங்ஷன்

17.36

17.40

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்

19.30

-

 

கட்டணம்

இந்த வந்தே பாரத் இரயிலுக்கான கட்டணம் ஆனது பயண வகுப்பைப் பொறுத்து மாறுபடுகிறது. அதன் படி, எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மைசூர் [எண்: 20607] வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலின் சேர் கார் கட்டணம் ரூ.921 ஆகும். இதற்கான எக்ஸ்கியூட்டிவ் வகுப்புக்கான கட்டணம் ரூ.1,880 ஆகும். அதே போல, மைசூர் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் [எண்: 20608] வரை செல்லக் கூடிய வந்தே பாரத் இரயிலின் சேர் கார் கட்டணம் ரூ.921 ஆகும். மேலும், இதற்கான எக்ஸ்கியூட்டிவ் வகுப்பு கட்டணம் ரூ.1,880           ஆக வசூலிக்கப்படுகிறது.

வந்தே பாரத் இரயில்

சேர் கார் கட்டணம்

எக்ஸ்கியூட்டிவ் வகுப்பு கட்டணம்

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மைசூர் [எண்: 20607]

ரூ.921

ரூ.1,880

மைசூர் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் [எண்: 20608]

ரூ.921

ரூ.1,880

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்