Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமெரிக்காவிடமிருந்து MQ-9 ரீப்பர் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு

Surya Updated:
அமெரிக்காவிடமிருந்து MQ-9 ரீப்பர் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவுRepresentative Image.

அமெரிக்காவிடமிருந்து, MQ-9 ரீப்பர் ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொள்ள உள்ளது. டெல்லியில் இன்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராத்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற, இந்திய பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் எனப்படும் டிஏசி கூட்டத்தில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, காபூல் தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்காவின் 30 டிரோன்களை, 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஆளில்லா, ஆயுதமேந்திய டிரோன்கள், சீனாவின் எல்லைகளிலும், இந்தியப்பெருங்கடல் கண்காணிப்பிலும் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 21-ம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையில் பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் நிலையில், அப்போது இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது. இதுதவிர, இந்திய பாதுகாப்பு படைகளுக்கான, 70 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கும், இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்