Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் கோளாகலம்...! புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Muthu Kumar July 16, 2022 & 12:45 [IST]
தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் கோளாகலம்...!  புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!Representative Image.

தமிழகத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. aதன்படு, செஸ் ஒலிம்பியாட் போடிக்கு அணைவரையும் வரவேற்க்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பரப்படம் ஒன்றில் நடத்துள்ளார். மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்விற்கு பிரதமர் மோடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சர்வதேச அளவில் நடைபெரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ள வரும் பல நாட்டு வீரர்கள், வீராங்கனைளுக்கும் உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போது கொரோனா மற்றும் குரங்கம்மை தொற்று அதிகரித்து வருகிறது. அதனால், சென்னை விமான நிலையம் வரும் செஸ் விளையாட்டு வீரர்கள் கொரோனா பரிசோதனைக்கு பிறகே தங்கும் விடுதிகளுக்கு அனுப்பப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தற்போது மேற்கொள்ளப்படும் குரங்கம்மை பரிசோதனையில் நெகட்டிவ் வரும் வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். மேலும், குரங்கம்மை தொற்று வீரர்களுக்கு இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்