Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உப்பில் வரையப்பட்ட செஸ் ஒலிம்பியாட் வரைபடம்....மாணவர்கள் அசத்தல்..!

madhankumar July 15, 2022 & 19:47 [IST]
உப்பில் வரையப்பட்ட செஸ் ஒலிம்பியாட் வரைபடம்....மாணவர்கள் அசத்தல்..!Representative Image.

2022 ஆம் ஆண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சேனையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை பிரம்மாண்டமான முறையில் வண்ண வண்ண உப்பில் வரைந்து அசத்தியுள்ளனர்.

ரஷ்யாவில் நடந்துவரும் போர் காரணமாக அங்கு நடைபெற இருந்த செஸ் ஒலிம்பியாட் 2022 இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. 200 நாடுகள் கலந்துகொள்ளும் இந்த போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். கடந்து 2021 ஆம் ஆண்டின் போட்டிகள் கொரோனா காரணமாக ஆன்லைனில் நடத்தப்பட்டது.

 ஜூலை 28 ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வர உள்ளார். இந்த நிலையில் "செஸ் ஒலிம்பியாட் 2022" போட்டிக்கான சின்னம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 'செஸ் தம்பி' என்ற இந்த சின்னம் தமிழக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த லோகோவில் செஸ் விளையாட்டில் இருக்கும் குதிரை தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்துகொண்டு வணக்கம் செலுத்துவது போல் அமைந்திருக்கும். இந்த சின்னத்தை தமிழக அரசனது பிரபலப்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக கோவை மணியகாரம்பாளையத்தில் அமைந்துள்ள கேம்போர்டு பள்ளி மாணவர்கள் செஸ் சின்னத்தை 40 அடி உயரம் 20 அடி அகலதில் வண்ண வண்ண உப்பை கொண்டு வரைந்துள்ளனர். 40 மாணவர்கள் இணைந்து 2 மணி நேரத்தில் இந்த சின்னத்தை வரைந்து அசத்தியுள்ளனர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்