Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிதம்பரம் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி.!

madhankumar May 19, 2022 & 09:44 [IST]
சிதம்பரம் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி.!Representative Image.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் அருள்மிகு சபாநாயகர் (நடராஜர்) திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படி, பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து இந்த கோவிலுக்கு பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர். இத்திருக்கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பாகும். அருள்மிகு சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர இரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்துது.

 

மேலும் படிக்க: அண்டத்தின் பரம்பொருள் ஈசன் ஜெகத்தில் மையத்தில் கொண்ட தில்லை சிற்றம்பலத்தின் அறியா சிறப்புகள்!

கொரோனா தொற்று காரணமாக கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருள்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இத்திருக்கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள்  கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றயதாக பக்தர்கள் தரப்பில் பெரும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்தை அரசு பரிசீலனை செய்து, அருள்மிகு நடராஜர் திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும், பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் அருள்மிகு நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்