Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தவறான சிகிச்சையால் பச்சிளம் குழந்தையின் கை அகற்றம்: பெற்றோர் குற்றச்சாட்டு...!

Baskarans Updated:
தவறான சிகிச்சையால் பச்சிளம் குழந்தையின் கை அகற்றம்: பெற்றோர் குற்றச்சாட்டு...!Representative Image.

சென்னை: அரசு மருத்துவமனையில் குழந் தையின் கை அகற்றப்பட்டதற்கு, சிகிச்சையில் அலட்சியம் காட்டியதே காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியதால், விசாரிக்க 3பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தஸ்தகீர் - அஜிஸா தம்பதி. இவர்களது ஒன்றரை வயது மகன் முகமதுமகிர். தலையில் நீர் கோர்த்தல் பிரச்சினை காரணமாக சென்னைராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர்.

அங்கு குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ்’ போடப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு ட்ரீப்ஸ் போடப்பட்ட வலது கைகறுப்பாக மாறியதுடன், அழுகத் தொடங்கியது. இதையடுத்து, குழந்தையின் கையை அகற்ற வேண்டுமெனத் தெரிவித்த மருத்துவர்கள், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் குழந்தையை அனுப்பிவைத்தனர்.

அங்கு 2 மணி நேர அறுவைசிகிச்சைக்குப் பின்னர், குழந்தையின் வலது கை மூட்டுப் பகுதிக்கு மேல் வரை அகற்றப்பட்டது. இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தபோது, அலட்சியமாக செயல்பட்டதே கை பறிபோனதற்குக் காரணமென்று பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூரியதாவது, அந்தக் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்ததால், பல்வேறு பிரச்சினைகள் இருந்தன.குழந்தைக்கு தவறுதலாக ஊசி போடப்பட்டதா என்று 3 அலு வலர்கள் விசாரிக்கின்றனர். கவனக் குறைவால் இந்த சம்பவம் நடந்தி ருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அளித்த விளக்கத் தில், ``குழந்தையின் மூளைக்கு அருகேயுள்ள வென்ட்ரிகுலர் அறையில் திரவம் கோர்த்திருந்தது. அதை சரிசெய்ய `ஷண்ட்' உப கரணம் பொருத்தப்பட்டது. அந்தஉபகரணம், அதன் நிலையிலிருந்து மாறியதால், அதை மாற்றி அமைக்க, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.

மேலும், ஊட்டச்சத்து, வளர்ச்சிகுறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளும் இருந்தன. சிகிச்சைக்குப் பின்னர், ரத்த நாளங்களில் ஏற்பட்டஉறைவுப் பாதிப்புக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது. குழந்தையின்உயிரைக் காப்பாற்ற வேண்டும்என்பதால், ரத்த ஓட்டம் நின்றுபோன வலது கையை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்