Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சீனாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் C919..! | China C919 Aircraft

Gowthami Subramani Updated:
சீனாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் C919..! | China C919 AircraftRepresentative Image.

சீனாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் C919 ஆகும். இது நேற்றைய தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று தனது முதல் வணிகப் பயணத்தை வெற்றிகரமாக முடித்ததாகத் தெரிவித்துள்ளது. அரசு நடத்தும், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸால் இந்த புதிய விமானம் இயக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி, ஸ்காலை 10.32 மணியளவில் ஷாங்காய்-லிருந்து புறப்பட்டு, மதியம் 12.31 மணிக்கு பெய்ஜிங் கேபிடல் சர்வதேச விமான நிலையத்திற்கு வனது சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

சீனாவின் C919 விமானம்

இந்த விமானம் ஆனது 164 இருக்கைகளைக் கொண்டுள்ளது. இதில், 130-க்கும் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பயணிகள் ரெட் போர்டிங் பாஸைப் பெற்றனர். இந்தப் புதிய விமானத்தில் பயணிகளுக்கு சௌகரியமானதாகவும், அனைவரும் நினைவு கூறும் வகையில் “தீம் உணவை”யும் வழங்கியது.

இந்த விமானம் ஆனது, ஷாங்காய் மற்றும் தென்மேற்கு நகரமான செங்டு இடையே சைனா ஈஸ்டர்ன் வழக்கமான பாதையில் இயக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

சீனாவின் வணிக விமானக் கழகமான COMAC இந்த C919 பிளேன் உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த செப்டம்பரில், சீனாவின் சிவில் ஏவியேஷன் நிர்வாகத்தால் சான்றிதழை வழங்கியது.

இந்த C919 செயல்பாட்டின் பாதுகாப்பானது, கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் 100 மணி நேர சரிபார்ப்பு நடத்தி உறுதிபடுத்தியது. அது மட்டுமல்லாமல், அதிக வெப்பநிலை, அதிக குளிர், அதிக ஈரப்பதம், அதிக காற்று மற்றும் உறைபனி உள்ளிட்ட பல்வேறு வகை தீவிர இயற்கை சூழ்நிலைகளிலும், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பல ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகே, 2017 ஆம் ஆண்டில் இந்த C919 தனது முதல் விமானத்தை உருவாக்கியது. இதன் முதல் வணிக விமான பயணம் ஞாயிற்றுக்கிழமை செல்வதற்கு முன்னதாகவே, இது பல சோதனை விமானங்களை நடத்தியது. மேலும், இந்த விமானம் ஆனது சீன விமானங்களின் நுழைவு போயிங் மற்றும் ஏர்பஸ் மீதான நம்பகத் தன்மையைக் குறைக்கலாம் எனவும், சர்வதேச சிவில் விமான சந்தையில் அவர்களுக்கு போட்டியை ஏற்படுத்தக் கூடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்