Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

F1 மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் 2023...பிரபல பாலிவுட் நடிகை பங்கேற்கிறார் | F1 Monaco Grand Prix 2023

Priyanka Hochumin Updated:
F1 மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் 2023...பிரபல பாலிவுட் நடிகை பங்கேற்கிறார் | F1 Monaco Grand Prix 2023Representative Image.

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் மொனாக்கோவில் நடைபெறும் F1 கிராண்ட் பிரிக்ஸில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

F1 மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் 2023:

F1 மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் மே 26 வெள்ளிக்கிழமை தொடங்கி மே 28 ஞாயிற்றுக்கிழமை 2023 இல் நடைபெறுகிறது. இது உலகளவில் நடைபெறும் மிகப்பெரிய கார் ரேஸாகும். இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியைக் காண ஜஸ்டின் பீபர், பெல்லா ஹடிட் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற சர்வதேச நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த முறை ஐரோப்பாவில் நடக்கும் F1 மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸில் கரீனா கபூர் கான் பங்கேற்பதாக கூறியுள்ளார்.

மொனாக்கோவில் நடைபெறும் F1 கிராண்ட் பிரிக்ஸில் கலந்து கொள்வதற்காக பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் அவர்கள் தி க்ரூ படப்பிடிப்பிலிருந்து ஓய்வு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மே 27 ஆம் தேதி மொனாக்கோவில் நடக்கும் பயிற்சி பந்தயத்தில் கரீனா கலந்து கொள்வார் என்றும், ஜிபி டிரைவர்களுடன் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. வரும் நவம்பர் மாதம் அபுதாபியில் சீசன் முடிவடையும் நிகழ்வுக்கு முன் 2023 ஃபார்முலா ஒன் அட்டவணையில் மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் 23 பந்தயங்களில் ஒன்றாகும்.

F1 மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸின் தொடக்க நாள் மே 26 அன்று நடைபெறும். அதைத் தொடர்ந்து மே 27 அன்று ஒரு தகுதி நாள் மற்றும் இறுதியாக, கிராண்ட் பிரிக்ஸ் மே 28 அன்று, மற்றொரு அற்புதமான வார இறுதியுடன் நிறைவு பெறும் என்று அதிகாரபூர்வ வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்