Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜப்பான் மீது ஏவுகணை ஏவிய சீனா...எல்லையில் பதற்றம்..!

madhankumar August 05, 2022 & 12:12 [IST]
ஜப்பான் மீது ஏவுகணை ஏவிய சீனா...எல்லையில் பதற்றம்..!Representative Image.

தைவானுக்கு எதிராக சீனா போர் பயிற்சி மேற்கொண்டுவரும் நிலையில் சீனா ஏவிய ஏவுகணை ஜப்பானில் விழுந்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

தைவான் எல்லையில் இருந்து சீனா வீசிய 9 ஏவுகணைகள் ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக்க ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் நோபோ கிஷி தெரிவித்துள்ளார். மேலும், இது ஜப்பானின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும் அவர் தெரிவித்தார். 

சில நாட்களுக்கு முன்னர் தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி வருகை தந்தார். அவரது வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அவர் தைவான் வந்தடைந்தார். நான்சி பெலோசி வருகைக்கு பதிலடி தரும் விதமாக தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் சீன படைகள் போர் ஒத்திகைகளில் ஈடுபட்டுவருகின்றன. 

இந்நிலையில் சீன ராணுவம் ஏவிய 9 ஏவுகணைகள் ஜப்பான் எல்லையில் விழுந்துள்ளது பெரும் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது. தைவான் - சீனா விவகாரத்தில் தைவான் ஆதரவு நிலைப்பாடு கொண்ட நாடாக ஜப்பான் இருப்பதால், அந்நாட்டை அச்சுறுத்தும் நோக்கோடு சீனா ஏவுகணைகளை ஏவியிருக்கலாம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்