Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அவருக்கு எதுக்கு வாழ்த்து சொல்றீங்க. கொந்தளித்த சீனா.. பதிலடி கொடுத்த இந்தியா!!

Sekar July 08, 2022 & 15:14 [IST]
அவருக்கு எதுக்கு வாழ்த்து சொல்றீங்க. கொந்தளித்த சீனா.. பதிலடி கொடுத்த இந்தியா!!Representative Image.

தலாய் லாமாவின் 87வது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்ததை சீனா விமர்சித்துள்ளது. எனினும் இந்தியாவின் நிலையான கொள்கைகளில் ஒன்று என கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது. சீனா திபெத்தை ஆக்கிரமித்த பிறகு அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலமானார் தலாய் லாமா. அவருக்கு ஆரம்பம் முதலே அடைக்கலம் கொடுத்து இந்தியா பாதுகாத்து வருகிறது.

தலாய் லாமாவுக்கு கடந்த புதன்கிழமை 87 வயது நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, சீனாவிடமிருந்து கடுமையான பதில் வந்தது. கடந்த ஆண்டும் அவரது பிறந்தநாளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

"புனிதர் தலாய் லாமாவுக்கு இன்று தொலைபேசியில் 87வது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவருடைய நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்" என்று மோடி கடந்த புதன்கிழமை ட்வீட் செய்தார்.

தலாய் லாமாவின் 87வது பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் தர்மசாலாவில் கொண்டாடினர். தலாய் லாமா 1959 இல் திபெத்தில் இருந்து தப்பி வந்ததில் இருந்து அங்கே வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரே சீனா கொள்கையை வலியுறுத்தியுள்ள சீனா, திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவின் பிரிவினைவாத இயல்பை முழுமையாகப் புரிந்து கொள்ள இந்தியாவை வலியுறுத்தியதோடு, சீனாவின் உள் விவகாரங்களில் தலையிட திபெத் தொடர்பான பிரச்சினைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது. 

பிரதமர் மோடியின் ட்வீட் குறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், "14வது தலாய் லாமாவின் சீன எதிர்ப்பு மற்றும் பிரிவினைவாத தன்மையை இந்திய தரப்பும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

"திபெத் தொடர்பான பிரச்சினைகளில் சீனாவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும், விவேகத்துடன் செயல்பட வேண்டும், பேச வேண்டும், திபெத் தொடர்பான விவகாரங்களில் சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்" என்று ஜாவோ கூறினார்.

"திபெத் தொடர்பான விவகாரங்கள் சீனாவின் உள் விவகாரங்கள் மற்றும் எந்த வெளி சக்திகளின் தலையீடும் இல்லை. வெளிநாட்டு அதிகாரிகளுக்கும் தலாய் லாமாவிற்கும் இடையிலான அனைத்து வகையான தொடர்புகளையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.

எனினும் இந்திய அரசு சீனாவின் விமர்சனத்தை நிராகரித்து, திபெத்திய ஆன்மீகத் தலைவரை கெளரவ விருந்தினராகக் கருதுவது அரசின் நிலையான கொள்கை என்று வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை ஒட்டுமொத்த பின்னணியில் பார்க்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்