Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

32 நாடுகளில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை வழங்கவிருக்கும் ஸ்பேஸ் எக்ஸ்.!

madhankumar May 16, 2022 & 15:01 [IST]
32 நாடுகளில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை வழங்கவிருக்கும் ஸ்பேஸ் எக்ஸ்.!Representative Image.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது செயற்கைக்கோள் இணைய சேவையான, ஸ்டார்லின்க் தற்போது 32-க்கும் அதிக நாடுகளில் கிடைப்பதாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய தகவல் ஸ்டார்லின்க் வலைதளத்தில் எந்தெந்த நாடுகளில் இணைய சேவை தற்போது கிடைக்கிறது (Available) என்றும், எங்கு இந்த இணைய சேவையை பெற காத்திருக்க வேண்டும் (Waitlist) என்றும் எங்கு விரைவில் (Coming Soon) வழங்கப்பட இருக்கின்றன என்ற விவரங்களை வெளியிட்டு உள்ளது. 

இந்நிலையில் முதற்கட்டமாக ஸ்டார்லின்க் இணைய சேவை வழங்கப்படும் நாடுகள் பட்டியலில், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பகுதிகள் இணைய சேவை கிடைக்கும் பிரிவில் இடம்பெற்று உள்ளன. இதனால் இங்கு ஸ்டார்லின்க் சேவையை உடனடியாக பயன்படுத்த முடியும் என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்து இருக்கிறது. இதுதவிர ஆப்ரிக்கா, தென்மேற்கு அமெரிக்க நாடுகளில் விரைவில் ஸ்டார்லின்க் இணைய சேவை வழங்கப்பட இருக்கிறது.

இதனையடுத்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் ஸ்டார்லின்க் இணைய சேவை விரைவில் வழங்கப்படவுள்ள பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய தகவல்  ஸ்பேஸ்எக்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக உலகம் முழுக்க 32 நாடுகளில் ஸ்டார்லின்க் இணைய சேவை வழங்கப்பட இருக்கிறது. இதை அடுத்து இந்தியா போன்ற நாடுகளிலும் ஸ்டார்லின்க் இணைய சேவை வழங்கப்படலாம்.

இதே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் அதிகப்பங்குகளை கைப்பற்றியுள்ள ட்விட்டர் அவரது கைகளுக்கு வரும் நிலையில் இருந்தது, இந்நிலையில் அவர் ட்விட்டரை வாங்குவதை நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்