Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

வரும் 27ம் தேதி இருளர் குடியிருப்பு திறப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு!

Selvarani Updated:
வரும் 27ம் தேதி இருளர் குடியிருப்பு திறப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு!Representative Image.

திருப்போரூர் அருகே கட்டி முடிக்கப்பட்ட இருளர் குடியிருப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 27 ம் தேதி திறந்து வைக்க உள்ள நிலையில், அந்த இடத்தினை அமைச்சர் தா.மோ. அன்பரசன்  ஆய்வு மேற்கொண்டார். 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மானாமதி ஊராட்சியில் இருளர் பழங்குடியின மக்களுக்காக நல்லம்மை ராமநாதன் அறக்கட்டளை நிறுவனர் அபிராமி ராமநாதன் தனது சொந்த நிதியிலிருந்து மானாம்பதி குயில் குப்பம் நகரில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எல்இடி தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம், மெத்தை, சோபா செட் உள்ளிட்ட அனைத்து வசதிகள் உள்ளடக்கிய 64 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

இந்த குடியிருப்பினை வரும் 27ஆம் தேதி தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த குடியிருப்பு பகுதியினை தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், அப்பகுதி மக்களின் பல்வேறு குறைகளை கேட்டதுடன் அனைத்து தேவைகளும் உடனடியாக சரி செய்து தரப்படும் என கூறினார். 

இந்த ஆய்வின்போது திருப்போரூர் சேர்மன் எஸ்.ஆர். எல். இதயவர்மன், திருப்போரூர் ஆத்ம குழு தலைவர் பையனூர் சேகர், பேரூராட்சி தலைவர்கள் தேவராஜ், யுவராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்