Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கலகத் தலைவன் படத்திற்கு ரிவ்யூ கேட்ட முதல்வர்....!

Manoj Krishnamoorthi Updated:
கலகத் தலைவன் படத்திற்கு ரிவ்யூ கேட்ட முதல்வர்....!Representative Image.

சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் 'கலகத் தலைவன்' ஆகும். தடையற தாக்க, தடம் போன்ற மிரட்டலான படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் கடந்த நவம்பர் 18 அன்று  கலகத் தலைவன் வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டுகளித்தார். 

கலகத் தலைவன் படத்திற்கு ரிவ்யூ கேட்ட முதல்வர்....!Representative Image

கலகத்தலைவனுக்கு முதல்வர் ரிவ்யூ

ரெட்  ஜெயண்ட் மூவிஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக நமக்கு அறிமுகமான உதயநிதி ஸ்டாலின். 2014 ஆம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் கதாநாயகன் ஆனார். ஆரம்பத்தில் காதல் காமெடி பாதையில் சென்ற உதயநிதி தற்போது சமூக அக்கறை படங்களில் நடிக்கிறார். சமிபவத்தில் வெளியான மனிதன், நெஞ்சுக்கு நீதி போன்ற படங்கள் அதற்கு சான்றாகும். 

இந்த ஆண்டு திரும்பும் பக்கம் எல்லாம் உதயநிதி தயாரிப்பில் படம் வெளியாகி கொண்டி இருந்தாலும், நடிகர் உதயநிதி திரையில் வருவது கலகத் தலைவன் படத்தில் தான். சிறப்பு காட்சியைப் பார்த்த முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். 

இந்த கதாபாத்திரம் இதுவரை திரையில் பார்த்த உதயநிதியின் மாறுபட்ட கேரக்டர் ஆகும். தற்போது சென்னையில் இருக்கும் மேகமூட்டத்தின் காரணத்தால் சென்னை குளிர்ந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் அமைச்சர்  மா.சுப்பிரமணியனுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வாக்கிங் செய்து கொண்டு இருநதார். 

அப்போது  இருவரும் 'கலகத் தலைவன்' படம் பற்றி பேசி கொண்ட விடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் முதல்வர் கேட்க அமைச்சர் படம் பார்த்தாக கூறி 'கலகத் தலைவன்' நன்றாக வந்திருப்பதாகக் கூறுகிறார். இப்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்