Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நிலக்கரி கையிருப்பு இல்லை...அதிர்ச்சி தகவல் அளித்த அமைச்சர்..!!

madhankumar June 12, 2022 & 16:13 [IST]
நிலக்கரி கையிருப்பு இல்லை...அதிர்ச்சி தகவல் அளித்த அமைச்சர்..!!Representative Image.

ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நிலக்கரியை ஏற்றி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலும் தற்போது இருக்கும் நிலக்கரி போதுமானதாக இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

அதன்படி நிலக்கரி கையிருப்பு ஆறரை நாட்களுக்குதான் உள்ளது ,இனி வரும் காலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லாத அளவிற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார். மேலும் தனியார் கொள்முதல் இல்லாமல் சொந்தமாக 6,220 மெகாவாட் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் பணிகள் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவு பெறும் எனவும் அதற்கான  பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதகவும் தெரிவித்துள்ளார்.

முதல்வரின்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வாரியத்தின் மூலமாக இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டு அவை இரு நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்  தமிழகத்திற்கு தட்டுப்பாடின்றி  நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்