Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அவமானம்.. முலாயம் சிங் யாதவிற்கு பத்ம விபூஷன் விருதுக்கு சமாஜ்வாதி கட்சியினர் எதிர்ப்பு!!

Sekar Updated:
அவமானம்.. முலாயம் சிங் யாதவிற்கு பத்ம விபூஷன் விருதுக்கு சமாஜ்வாதி கட்சியினர் எதிர்ப்பு!!Representative Image.

முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கியதன் மூலம், அவரது அந்தஸ்து மற்றும் நாட்டிற்கான பங்களிப்புகளை அரசாங்கம் கேலிக்கூத்தாக்கியுள்ளது என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா தெரிவித்தார். சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கட்சியின் இதர தலைவர்களுடன் மவுரியாவும் கோரிக்கை விடுத்தார்.

முலாயம் சிங் யாதவுக்கு மரணத்திற்குப் பின் நேற்று பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு பதிலளித்து சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ எஸ்பி மவுரியா ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார். 

அதில் "நேதாஜி ஸ்ரீ முலாயம் சிங் யாதவுக்கு மரணத்திற்குப் பின் பத்ம விபூஷண் வழங்கியதன் மூலம், நேதாஜியின் அந்தஸ்து, பணி மற்றும் தேசத்திற்கான பங்களிப்புகளை இந்திய அரசு கேலிக்கூத்தாக்கியுள்ளது. மதிக்கப்பட வேண்டும் என்றால் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஐபி சிங்கும் தெரிவித்தார். "மண்ணின் மகன் மறைந்த முலாயம் சிங் யாதவுக்கு பாரத ரத்னா, உயரிய குடிமகன் விருதைத் தவிர வேறு எந்த மரியாதையும் இல்லை. நமது மரியாதைக்குரிய நேதாஜிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அறிவிப்பை தாமதமின்றி வெளியிட வேண்டும்" என்று ஐபி சிங் ட்வீட் செய்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் மற்றும் மூன்று முறை உத்தரபிரதேச முதல்வராக இருந்த முலாயம் சிங் யாதவ் கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி மரணமடைந்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்