Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சொகுசு பங்களாவில் இளம் பெண்ணுடன் மாஜி அமைச்சர் உல்லாசம்.. வெளுத்தெடுத்த மனைவி!!

Sekar June 05, 2022 & 09:53 [IST]
சொகுசு பங்களாவில் இளம் பெண்ணுடன் மாஜி அமைச்சர் உல்லாசம்.. வெளுத்தெடுத்த மனைவி!!Representative Image.

குஜராத்தில் இந்த வருட இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் இளம் பெண்ணுடன் சொகுசு பங்களாவில் உல்லாசமாக இருந்ததை மனைவி கையும் களவுமாக பிடித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பரத்சிங் சோலங்கி, அரசியலில் இருந்து சில மாதங்களுக்கு ஓய்வு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

வைரால்கும் வீடியோவில் பரத்சிங் சோலங்கியின் மனைவி ரேஷ்மா மற்றும் அவருக்கு ஆதரவாக வந்தவர்கள் சண்டையிடுவதைக் காட்டுகிறது. சோலங்கியின் மனைவி அங்கிருந்த இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து அடிக்க முற்பட்டபோது, சோலங்கி தொடர்ந்து மனைவியை தடுக்க முயல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே இந்த வீடியோ வைரலாகி காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள நிலையில் வைரலான வீடியோவைப் பற்றி பேசிய சோலங்கி, தான் ஏற்கனவே விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பதாகவும், அது விசாரணையில் உள்ளது என்றும் கூறினார்.

தனது திருமண வாழ்க்கை குறித்து மேலும் பேசிய சோலங்கி, “நாங்கள் பல ஆண்டுகளாக ஒன்றாக வாழவில்லை. எனது சொத்தை அபகரிக்க கடந்த காலத்தில் எனது மனைவி எனக்கு தீங்கு செய்ய முயன்றதால் நான் விவாகரத்து கூறியுள்ளேன். 

என் உயிரைப் பறிக்கக் கூட அவர் முயற்சி செய்தார். நான் அவரிடமிருந்து விவாகரத்து செய்தால் நான் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். விவாகரத்து கோரிய எனது மனுவை ஜூன் 15ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்கும்” என்றார். மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும் வரை, நான் அதைப் பற்றி பேசமாட்டேன் என்றும் அவர் கூறினார்.

தனது மனைவி தனது பெயரில் பணத்தை பெற்றுக்கொண்டு மக்களை ஏமாற்றியதாக சில காலம் முன்பு இவர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்த நினைக்கும் எதிரிகளின் கைப்பாவையாக மாறி ரேஷ்மா இவ்வாறு செய்து வருவதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

எனினும், இந்த வீடியோ அனைத்து மக்களிடமும் சென்று சேர்ந்த நிலையில், அரசியலில் இருந்து சில காலம் விலகி இருக்கப்போவதாக சோலங்கி அறிவித்துள்ளார். பரத்சிங் சோலங்கி குஜராத் முன்னாள் முதல்வர் மாதவ்சிங் சோலங்கியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்