Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Congress rally from Kanyakumari to Kashmir : குமரி முதல் காஷ்மீர் வரை.. மோடியை வீழ்த்த காங்கிரஸ் மெகா திட்டம்.. பயனளிக்குமா?

Sekar May 15, 2022 & 21:59 [IST]
Congress rally from Kanyakumari to Kashmir : குமரி முதல் காஷ்மீர் வரை.. மோடியை வீழ்த்த காங்கிரஸ் மெகா திட்டம்.. பயனளிக்குமா?Representative Image.

Congress rally from Kanyakumari to Kashmir : காங்கிரஸ் மிகவும் வலுவிழந்து காணப்படும் நிலையில், இந்தியா முழுவதும் கட்சியை வலுப்படுத்த குமரி முதல் காஷ்மீர் வரை பேரணி நடத்தி கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

2014இல் மோடியின் எழுச்சிக்கு பிறகு நாடு முழுவதும் பாஜக வலுவாக உள்ள நிலையில், 2024 தேர்தலில் மோடியை வீழ்த்தியே தீர வேண்டும் எனும் முனைப்பில் உள்ள காங்கிரஸ் இப்போதே தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டது.

இதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் கட்சியின் சார்பில் சிந்தனை அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அதில் பேசிய சோனியா காந்தி, வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை பேரணி நடத்தப்படும் என்றும் இளைஞர்கள் உள்பட அனைவரும் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சமூக மற்றும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும், அரசியல் சாசனத்தை காக்கும் வகையிலும் இந்த பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தன்னைப் போன்ற முதியவர்களும் பேரணியில் எளிதாக பங்கேற்க வழிவகை செய்யப்படும் என்றும் நாம் நிச்சயம் வெல்வோம் என்றும் பேசி எழுச்சியூட்டியுள்ளார்.

ஆனால் கட்சி இருக்கும் நிலையில், இதெல்லாம் சாத்தியமாகுமா என இப்போதே கட்சியின் தொண்டர்கள் பலர் நம் காதுப்படவே பேசுவது கேட்கத்தான் செய்கிறது.

காங்கிரசின் இந்த ஸ்ட்ராட்டஜி வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்