Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மொத்தம் 50 கோடி.. அத்தனையும் ரொக்கம்.. அதிரவைத்த அர்பிதா முகர்ஜி!!

Sekar July 28, 2022 & 12:15 [IST]
மொத்தம் 50 கோடி.. அத்தனையும் ரொக்கம்.. அதிரவைத்த அர்பிதா முகர்ஜி!!Representative Image.

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளரான அர்பிதா முகர்ஜியின் இரண்டாவது அடுக்குமாடி குடியிருப்பில் 18 மணி நேர சோதனையில் அமலாக்க இயக்குனரகம் இன்று காலை இறுதியாக ஏராளமான பணத்தைக் கைப்பற்றியது. 

முன்னதாக அர்பிதா முகர்ஜியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கொல்கத்தாவில் உள்ள வளாகத்தில் இருந்து மொத்தம் ரூ.29 கோடி ரொக்கம் மற்றும் 5 கிலோ தங்கத்தை கைப்பற்றியதை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தற்போதுவரை மீட்கப்பட்ட மொத்த பணம் ரூ.50 கோடியாக உயர்ந்துள்ளது. 

மேலும் அர்பிதா முகர்ஜியின் வளாகத்தில் இருந்து மொத்தம் 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதன் நோக்கம் மற்றும் பயன்பாடு கண்டறியப்பட்டு வருவதாகவும் அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

பணத்தைத் தவிர, மோசடியில் தொடர்புடைய நபர்களின் பல்வேறு இடங்களில் இருந்து பல குற்றச் சாட்டு ஆவணங்கள், பதிவுகள், சந்தேகத்திற்குரிய நிறுவனங்களின் விவரங்கள், மின்னணு சாதனங்கள், வெளிநாட்டு கரன்சி மற்றும் தங்கம் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் நடந்த ஆசிரியர் ஆட்தேர்வு நியமனத்தில் நடந்த ஊழலில் மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு தொடர்பு உள்ளது எனக் கூறப்படும் நிலையில், பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அமலாக்கத்துறை அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களில் தொடர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை