Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி - 137 மின்கம்பங்களை மாற்றியமைக்க அமைச்சர் அதிரடி உத்தரவு..!!

Saraswathi Updated:
மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி - 137 மின்கம்பங்களை மாற்றியமைக்க அமைச்சர் அதிரடி உத்தரவு..!!Representative Image.

சென்னையில் புழுதிவாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்துவரும் 137 மின்சார கம்பங்களை மாற்றி அமைக்க அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.  

சென்னையை அடுத்த  புழுதிவாக்கம் 186வது வார்டு, மடிப்பாக்கம் 187 மற்றும் 188வது ஆகிய வார்டுகளுக்குட்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது, மழைநீர் வடிகால்வாய் அமைக்கும்போது நடுவே மின் கம்பங்கள் இருப்பதால் பணிகள் நிறைபெறமால் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.  

 உடனே தமிழக நிதித்துறை மற்றும் மின்வாரிய துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு தொலைபேசியில் புகார் செய்தார். இதையடுத்து,  அமைச்சர் தங்கம் தென்னரசு சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன்  இணைந்து  புழுதிவாக்கம், மடிப்பாக்கம் சதாசிவம் நகர், குபேரன் நகர் பகுதியில் நடக்கும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஆய்வு செய்தனர். 

அப்போது கால்வாய்களுக்கு நடுவே இடையூராக இருக்கும் மின் கம்பங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்தார்.   
இது தொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  53 ஆண்டுகளுக்கு பின் ஜுன் மாதம்  சென்னையில் பெய்த 2வது பெரிய மழை. சென்னையில் மழை பாதிப்பு இருந்ததால் முதலமைச்சர், புதிய மழைநீர் வடிகால்வாய்களை பல்வேறு துறைகள் மூலமாக கட்டி முடித்து உள்ளார். கொசஸ்தளம், கோவளம் போன்ற நீர்பிடிப்பு பகுதிகளில் 1190 கிலோ மீட்டர் ரூ.4900 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடக்கிறது. 50 சதவீதம் பணிகள் நிறைவு பெற்று உள்ள நிலையில் கடந்த மழை காலங்களில் ஏற்பட்ட பாதிப்பு தற்போது இல்லை. 

மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியில் மக்களை படகில் வந்து மீட்க வேண்டிய நிலை இருக்கும். மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை உள்பட பெருங்குடி மண்டலத்தில் ரூ. 67 கோடி செலவில் புதிய மழைநீர் வடிகால் வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கால்வாய்களில் நடுவே 137 இடங்களில் மின்சார கம்பங்கள் உள்ளன. கம்பங்களை இடமாற்றம் செய்ததால் மழைநீர் வடிகால்வாய்கள் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக முடிக்கப்படும். மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால்வாய், பாதாள சாக்கடை பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்