Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மறுபடியும் முதல்ல இருந்தா.... ரெடியா இருங்க மக்களே....கொரோனா 4வது அலை பரவ வாய்ப்பு?

madhankumar June 02, 2022 & 14:37 [IST]
மறுபடியும் முதல்ல இருந்தா.... ரெடியா இருங்க மக்களே....கொரோனா 4வது அலை பரவ வாய்ப்பு?Representative Image.

இந்திய முழுவதும் பரவி வந்த கொரோனா 3வது அலையை பெரும்பாடுபட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக முழு வீச்சில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது, முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு கொரோனா 3வது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் சுற்றுலா சென்று குடும்பத்துடன் உற்சாக வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்தியாவில் ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை பரவ வாய்ப்புகள் உள்ளதாக ஐஐடி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப மெல்ல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க ஆரமித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகரிக்க ஆரமித்துள்ளது. எனவே சுகாதார நடவடிக்கைகளை சுகாதார துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

மீண்டும் சமூக இடைவெளி, முகக்கவசங்களை கடைப்பிடிக்க மக்களை அறிவுறுத்த வேண்டும். பொதுமக்கள்  அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஜூனில் கொரோனா 4 வது அலை பரவல் இருக்கலாம் என கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

கொரோனா பரவல் குறைந்ததையடுத்து மக்கள் அனைவரும் சுற்றுலா என பல்வேறு இடங்களில் சுத்தித்திரமாக போய்வருவதால் கொரோன மீண்டும் அதிகமாக பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தமிழக சுகாதாரதுரை எச்சரித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்