Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Corona Situation : இந்திய கொரோனா நிலவரம்..! இன்று 1200க்கும் மேல் அதிகரிப்பு..?

Muthu Kumar June 16, 2022 & 10:40 [IST]
Corona Situation : இந்திய கொரோனா நிலவரம்..! இன்று 1200க்கும் மேல் அதிகரிப்பு..?Representative Image.

Corona Situation : இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல குறைந்து வந்த கொரொனா தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

கொரோனா நிலவரம்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தினசரி பாதிப்புகள் குறைந்து வந்தது. இந்நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு நேற்று 5 ஆயிரத்தை தாண்டி இருந்த நிலையில் இன்று புதிய பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நிலவரப்படி கொரோனாவால் புதிதாக 12,213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை இந்தியாவில் மொத்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 4,32,57,730 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,24,803 ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 7,624 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,74,712 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 58,215 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தடுப்பூசி நிலவரம்

இதனையடுத்து, இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,21,942 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை 11,95,67,37,014 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்