Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Corona Situation : இந்திய கொரோனா நிலவரம்..? கொரோனா தடுப்பூசி நிலவரம்..?

Muthu Kumar May 24, 2022 & 09:50 [IST]
Corona Situation : இந்திய கொரோனா நிலவரம்..? கொரோனா தடுப்பூசி நிலவரம்..?Representative Image.

Corona Situation : இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து காணப்பட்டது. திடீரென அதிகமானாது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரே நாளில் 1,675 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய கொரோனா நிலவரம்..?

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,31,38,393 லிருந்து 4,31,40,068 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில் 1,635 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீட்டுக்கு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,99,102 லிருந்து 4,26,00,737 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,490 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14,832 லிருந்து 14,841 ஆக உயர்ந்துள்ளது. 

தடுப்பூசி நிலவரம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,76,878 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் இதுவரை 192.52 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்