Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலகளாவிய சுகாதார அவசர நிலை பிரகடனம்..! குரங்கு அம்மை தீவிரம்..!

Muthu Kumar July 24, 2022 & 09:45 [IST]
உலகளாவிய சுகாதார அவசர நிலை பிரகடனம்..! குரங்கு அம்மை தீவிரம்..!Representative Image.

ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் ஐரோப்பிய நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், தொடக்கத்தில் ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த நோய் அறிகுறி கண்டறியப்பட்டாலும், தற்போது பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, தற்போது குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசர நிலை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களில் 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோயால் 16,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பல்வேறு நாடுகளில் தொற்று பரவி வருவதை அடுத்து சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அறிவித்துள்ளார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்