Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காவேரி மருத்துவமனைக்கு வரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு..!

Baskaran Updated:
காவேரி மருத்துவமனைக்கு வரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு..!Representative Image.

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை ஆய்வு செய்ய டெல்லியிலிருந்து 5 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு இன்று சென்னை வர உள்ளனர்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பணம் பெற்றுக் கொண்டு வேலை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அமலாக்கத்துறையினர், கரூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலின், கார்கே, மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

சுமார் 17மணிநேரம் நடந்த சோதையின் முடிவில் நேற்றுமுன்தினம் அதிகாலை அவரை கைது செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு காரில் அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு கடுமையான நெஞ்சி வலி ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு உள்ளதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். இதையே இஎஸ்ஐ மருத்துவர்களும் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர். மேலும் அமலாக்கத்துறை சார்பில் எய்ம்ஸ் மருத்துவர்களும் பரிசோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதையேற்ற நீதிபதிகள் தேவைப்படும் பட்சத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதிக்க அனுமதித்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை ஆய்வு செய்ய டெல்லியிலிருந்து 5 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு இன்று சென்னை வர உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்